செய்திகள் :

Asian Games: இந்திய அணிக்கு தங்கப்பதக்கம்; வெள்ளி, வெண்கலம், தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா!

post image

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டிகளில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

1984-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அப்போதைய இந்திய வீராங்கனையும், இப்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி.உஷா 55.42 வினாடிகளில் 400 மீட்டர் தொலைவைத் தடை தாண்டி கடந்ததுதான் இந்திய தேசிய சாதனையாக இருந்தது.

வித்யா ராம்ராஜ்
வித்யா ராம்ராஜ்

கடந்த 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடித்திருந்தார். இவரின் இந்தச் சாதனையை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டி 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. வித்யா ராம்ராஜ், பிராசி, கிரண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியிருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி

நடப்பு ஆசிய விளையாட்டில், ஏற்கனவே கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம்பெற்றிருந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

’டிரைவர் பொண்ணு, மூணு வருச கடும் உழைப்பு.!’ - பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யாவின் தாய் உருக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், இந்தியாவின் வித்யா ராமராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். மேலும், இதே பிரிவில் இந்திய ... மேலும் பார்க்க

Asian games: நீளம் தாண்டுதல் டு ஈட்டி எறிதல்... பதக்கங்களைக் குவித்த இந்தியா | Roundup

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பத்தாவது நாள் தடகளப் போட்டிகளில் இந்தியா சிறப்பான பதக்க வேட்டையை நடத்தியுள்ளது. நீளம் தாண்டுதல், 1500 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தடை ஓட்டம், 3000 மீட்டர் ஸ்... மேலும் பார்க்க

Asian Games: முறியடிக்கப்பட்ட பிடி உஷா சாதனை; வெண்கலம் வென்று சாதித்த வித்யா ராம்ராஜ்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் வித்யா ராமராஜ் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பந்தய தூரத்தை வெறும் 54.75 விநாடிகளில் கடந்த அ... மேலும் பார்க்க

Asian Games : 'ஒரு நொடி கொண்டாட்டத்தால் வீழ்ந்த இந்திய ஸ்குவாஶ் இணை!' - நடந்தது என்ன?

விளையாட்டு உலகில் எத்தனையோ விசித்திரமான தோல்விகளையும், கடைசி நிமிடத் திருப்புமுனைகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், 'முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடியதால்' தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஒரு அணி ... மேலும் பார்க்க

Asian games: காலில் அறுவை சிகிச்சை; விடாமுயற்சியால் வெண்கலம் வென்ற மயிலாடுதுறை வீராங்கனை!

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பல மாநிலங்கள... மேலும் பார்க்க

`அவ்ளோதான்...' முடக்கிய காயம்: பல ஆண்டு போராட்டம் டு Asian Games-ல் வெண்கலம்; பரணிகாவின் சாதனை பயணம்

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசியப் போட்டிகளில் போல் வால்ட் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார், மயிலாடுதுறை மாவட்டம், சேத்திரபாலபுரத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன். சிற... மேலும் பார்க்க