சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச ...
Asian games: 28 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம்; வரலாற்று சாதனை படைத்த மீராபாய்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் 28 ஆண்டுக்கால காத்திருப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு!
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில், மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய விளையாட்டுப் பதக்கம் என்பது கூடுதல் சிறப்பு.
போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க்கில் 111 கிலோ என மொத்தம் 198 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார் மீராபாய். வட கொரியாவின் ரி சாங் கும் 215 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் மீராபாய் சானுவின் பதக்கப் பட்டியலில் நீண்ட நாள்களாக இல்லாமல் இருந்த ஆசிய விளையாட்டுப் பதக்கமும் தற்போது இணைந்துள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளி, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் என ஏற்கெனவே சாதனை படைத்திருந்த அவருக்கு, ஆசிய விளையாட்டுப் பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக இருந்தது.
அதுமட்டுமல்ல... ஆசிய விளையாட்டுப் பளுதூக்குதலில் இந்தியா கடைசியாக பதக்கம் வென்றது 1998 பேங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில். அப்போது கர்ணம் மல்லேஸ்வரி 63 கிலோ பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். அதன் பிறகு 28 ஆண்டுகள் கழித்து அதே வெள்ளிப் பதக்கத்தை வென்று அந்த வரலாற்றை மீண்டும் தொடர்ந்திருக்கிறார் மீராபாய்.



.jpg)













