செய்திகள் :

BB Tamil 10: தந்தை திடீரென உயிரிழப்பு.. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஆனந்தி!

post image

பிக்பாஸ் சீசன் 10 ல் கலந்து கொண்ட நடிகை ஆனந்தியின் தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக திடீரென இன்று உயிரிழந்தார். தொடர்ந்து ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

முன்னதாக இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. அதில் கலந்து கொண்ட ஆனந்தி ஏற்கனவே மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகி இருந்தது.

இதற்கிடையில் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே ஆனந்தியின் வீட்டிலிருந்து பிக்பாஸ் யூனிட்டுக்கு அவரது தந்தை இறந்தது குறித்த தகவல் வர, தகவலை அங்கு ஆனந்தியிடம் சொல்லாமலேயே அவரை நிகழ்ச்சியிலிருந்து அவசரமாக அனுப்பி வைத்தனர்.

ஆனந்தி

மறைந்த ஆனந்தியின் அப்பா உடற்கல்வி ஆசிசியராக பணி புரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் விளையாட்டுகளுக்கு ரெஃப்ரியாகச் செல்வது போன்றவை மூலம் தன்னை பிசியாகவே வைத்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் ஆனந்தியின் அம்மா நம்மிடம் பேசிய போது, உடற்கல்வி ஆசிரியர் என்பதால் ஆனந்தியை விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வைத்தார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்தியின் பெற்றோர் கோவையில் வசித்து வருகிற நிலையில், ஆனந்தி பிக்பாஸ் சென்றதால் அவரது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அவரது அம்மா ரேணுகா மட்டும் சென்னைக்கு வந்திருந்தார். சுப்பையா கோவையில்தான் இருந்தாராம்.

சுப்பையா –ரேணுகா தம்பதிக்கு ஆன்ந்தி தவிர ஒரு மகன் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்தது.

Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! - யார் இந்த கவி?

பிக்பாஸ் சீசன் 10-ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர் உள்ளே செல்ல இருக்கிறார்.விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: லக்ஷ்மி பிரியாவைத் தொடர்ந்து ஆனந்தியும் அவுட்?! என்ன நடக்கிறது பிக் பாஸில்?

பிக்பாஸ் சீசன் 10 விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய நிகழ்ச்சியில் பிளாக் பாண்டி, சாவின்யா, ஜாவித், மணிவண்ணன் ஆகியோர் ஷோவிலிருந்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: "வேறு யாரையோ காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்!" - வெளியேறினாரா லட்சுமி பிரியா?

`மகாநதி' தொடரின் மூலம் தனக்கென ஓர் ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர் லட்சுமி பிரியா.̀காவேரி' என்கிற இவர் கதாபாத்திரத்திற்கு அத்தனை வரவேற்பு கிடைத்தது. தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக̀பிக் பாஸ் தமிழ்... மேலும் பார்க்க

BB Varshini: `குறும்படம் எடுப்பதாக இளைஞரிடம் பணம் பறித்துத் தாக்கிய புகார்' - பிக்பாஸ் வர்ஷினி கைது!

பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் பணமோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பிக்பாஸ் 8வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். சினிமாவில்... மேலும் பார்க்க

``ஒற்றுமையாக இருந்தோம்; பிரச்னைக்கு பணமே காரணம்; தங்கம் அவர் வீக்னஸ்"- ராதா புகார் குறித்து அம்பிகா

பிரபல நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் பிரபல நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: "ல‌க்ஷ்மி பிரியாவுக்கு சேனலில் நல்ல செல்வாக்குனு சொல்றாங்க‌"- ஆனந்தி அம்மா பேட்டி

19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெ... மேலும் பார்க்க