செய்திகள் :

Bhagyaraj: "கண்களை மட்டும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்!" - பாக்யராஜின் அலுவலகத்திலிருந்து கடிதம்!

post image

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கடந்த 27-ம் தேதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரைப்பிரபலங்கள் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு 28-ம் தேதி பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது பாக்யராஜின் அலுவலக சமூக வலைதளக் கணக்கில் இருந்து கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

Bhagyaraj
Bhagyaraj

அந்தக் கடிதத்தில், "சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது” நான் எழுதிய இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக்கிய என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன்.

அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டுவிட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன்.

என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” பார்த்தீர்களா? இன்னும்..... கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்! வரும்போதே expiry date குறிக்கப்படாத உடல் இது.

என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிருகப்பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது. இனி நான்.... நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க