செய்திகள் :

"அரசுத் திரையரங்குகள், கலைஞர்களுக்கான வீடுகள்" - முதல்வர் விஜய்க்கு சீனு ராமசாமியின் 6 கோரிக்கைகள்

post image

முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப்போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு இந்த முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

1. அரசுத் திரையரங்குகள்

கேரளாவின் KSFDC பாணியில், எளிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்காக அரசுத் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டும். இது தியேட்டர் கிடைக்காமல் முடங்கிப்போகும் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக அமையும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

2. திரைப்பட ரசனைக் கல்வி

பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனைக் கல்வி (Film Appreciation) கொண்டுவரப்பட வேண்டும். சினிமாவை ஒரு கலையாகப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை இது இளம்தலைமுறையினரிடம் உருவாக்கும்.

3. உலகத் திரைப்பட மாநாடு

தமிழ்ச் சங்க மாநாட்டைப் போல, தமிழகத்தில் உலகளாவிய திரைப்பட மாநாடு நடத்தப்பட வேண்டும். இது தமிழ்த் திரைக் கலைஞர்களையும் உலகத் தரம் வாய்ந்த படைப்பாளிகளையும் ஒரே தளத்தில் இணைக்க உதவும்.

4. ஒற்றைச் சாளர அனுமதி

நமது பாரம்பர்ய மற்றும் பண்பாட்டுத் தலங்களில் எளிதாகப் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் முன் அனுமதி வழங்கப்பட வேண்டும். படப்பிடிப்புத் தளங்களில் நிலவும் அதிகாரத்துவச் சிக்கல்களையும் மறைமுகக் கையூட்டுகளையும் ஒழிக்க இதுவே மிகச்சிறந்த வழி.

5. சுயாதீனத் திரைப்பட மானியம்

லண்டன், மகாராஷ்டிர மாநிலத்தைப் போல, நட்சத்திர அந்தஸ்து இல்லாத எளிய திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி

6. கலைஞர்களுக்கான வீடுகள்

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கான வீடுகள் தரும் பணியை விரைவுபடுத்தி, தகுதியான கலைஞர்களுக்கு அவை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

லஞ்சத்தை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கலைத்துறையிலும் இத்தகைய கொள்கை ரீதியான மாற்றங்களை இந்த அரசு சாத்தியமாக்கும் என்று நம்புகிறேன்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

பாக்யராஜ்: "பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி" - சாந்தனு

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்கியராஜ் ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட... மேலும் பார்க்க

அழகி: ஒரே வாக்கியத்தில், வாழ்வின் மொத்தக் காதலையும் தந்துவிடுகிறாள் | `சினி'ஸ்கோப் 02 | ஆதி தாமிரா

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!அழகி: காதலின் வாழ்த்து!`சினி'ஸ்கோப் 02”உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா சண்முக... மேலும் பார்க்க

Lingam: "நான் நடிப்பையும் அரசியலையும் தனித்தனியாகத்தான் பார்க்கிறேன்" - போஸ் வெங்கட் பேட்டி

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 80களில் குமரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எழுத்தாளர் பா. ராஜந... மேலும் பார்க்க

Brigida: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா சகா; அவர் யார் தெரியுமா?

தமிழில் 'ஆஹா கல்யாணம்' வெப் தொடரின் மூலம் பிரபலமாகி இரவின் நிழல், மாஸ்டர், அயோக்யா, இட்லி கடை, மார்கன், கருடன் உள்ளிட்ட தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரிகிடா சகா. தமிழ் தவிர்த்த... மேலும் பார்க்க

Suriya 48: மீண்டும் 'ஜெய் பீம்' கூட்டணி; கயாடு லோஹர் - சாய் அபயங்கர்! - 'சூர்யா 48' அப்டேட்ஸ்

சூர்யா நடித்திருந்த 'கருப்பு' திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அப்படத்திற்கு வசூல் ரீதியான நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவ... மேலும் பார்க்க

Con City Review: நூதன மோசடிகளைச் செய்யும் 'டார்க் காமெடி' குடும்பம்; மனதைக் கொள்ளையடிக்கிறதா படம்?

கர்நாடகாவின் முல்கியில் குடும்பமாக வாழும் சரவணன் (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்), ஜாக்கி (யோகி பாபு), ஜானகி (வடிவுக்கரசி) ஆகியோரின் அமைதியான வாழ்க்கையை மீண்டும் எட்டிப்பிடிக்கிறது அவர்களது கடந்த க... மேலும் பார்க்க