செய்திகள் :

"பண மதிப்பிழப்பு நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியப் பொருளாதாரம் என்ன ஆகுமோ?" - ரவிக்குமார் MP

post image

மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவிற்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சுகள் எழுந்துகொண்டே உள்ளன.

சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜார்ஜ் குரியன். இவரிடம் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் கூடுதல் பொறுப்பும் இருந்து வந்தது.

அவருடைய ராஜ்ய சபா பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஜார்ஜ் குரியன்.

மேலும், இன்னொரு மத்திய இணையமைச்சரான ரவ்னீத் சிங் பிட்டுவின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், இவரது அமைச்சர் பதவியும் காலியாகிறது.

பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

சந்திப்புகள்

இந்த இரு அமைச்சரவை காலியாவதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் மாறுதல்கள் ஏற்படலாம் என்கிற பேச்சுகள் அடிபட்டன.

இந்தப் பேச்சுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த 23-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் பிரதமர் மோடி. அடுத்த இரண்டு நாள்களிலேயே (ஜூன் 25, 2026) முர்முவை சந்தித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தர்மேந்திர பிரதான்...

இந்த நேரத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததையொட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கிறது.

மோடியும் தர்மேந்திர பிரதான் மீது அதிருப்தியாக இருப்பதாகவும், அதனால், பிரதானின் அமைச்சர் பதவி பறிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.

ரவிக்குமார் பதிவு

இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு முக்கிய பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த 26-ம் தேதி ரவிக்குமாரின் பதிவு: "திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சர் ஆக்கப்படப்போவதாக செய்திகள் கசிகின்றன. அது உண்மையா?

மோடி அரசின் படுதோல்வித் திட்டமான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு ( demonetisation ) நடவடிக்கையின் நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியாவின் பொருளாதார நிலை என்ன ஆகுமோ!"

நேற்று நிர்மலா சீதாராமனை சுட்டிக்காட்டி, "கல்வி அமைச்சர் ஆகிறார் என்கிறார்கள். வாழ்த்துகள்!!" என்று பதிவிட்டுள்ளார் ரவிக்குமார்.

ஆந்திர மாணவி தவறவிட்ட சான்றிதழ்கள்; உதவிய ஏஐ; நூறு பஸ்களில் சோதனை நடத்தி கண்டுபிடித்த கேரள போலீஸ்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜாஷ்னவி என்ற 17 வயது மாணவி, எல்.எல்.பி நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக தனது தாய் லலிதா ராணியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவுக்குச் சென்றிருந்தார். அன்று காலை 10:30 மணிக்கு கா... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலில் ஸ்​டா​லின் நிற்பதற்​கு மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை" - மு.வீரபாண்டியன் | Live Updates

ஸ்டாலின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதில்நேற்று முன்தினம் (ஜூன் 28, 2026) திமுக தலைவர் ஸ்டாலின், 'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பேசியிருந்தார். ஸ்டாலின் பேச்சுக்குப்... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``என்னை விடுவிக்குமாறு தலைமையிடம் நானே கேட்டுக்கொண்டேன்" - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந... மேலும் பார்க்க

``அமைச்சர்கள் இருவரும் ரிஷர்வேசனில் வந்தவர்களல்ல..."- காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் பேச்சு!

தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந... மேலும் பார்க்க

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக நீடித்து வரும் நிலையில், அதற்கான முற்றுப்புள்ளி வரும் ஜூலை 2-ஆம் தேதி இ.சி.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கிடைத்துவிடும் என எதிர்பா... மேலும் பார்க்க

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``முதல்வர் கரூர் செல்லவிருப்பதாக எழுந்த செய்திகள் வெளியாகின்றன. முதலமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவ... மேலும் பார்க்க