செய்திகள் :

கரூர்: டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!

post image

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது: 48). இவர், மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இரவு 10 மணியளவில் வழக்கம்போல் டாஸ்மாக் பாரில் பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காளிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு தயாராக இருந்த மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டினர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்நிலையில், மறுநாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு வராததால் அவருடன் பணிபுரியும் அரவிந்த் என்பவர் ராஜேந்திரனை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார்.

ராஜேந்திரன்

ஆனால், அவர் செல்போனை எடுக்காததால் ராஜேந்திரனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காளிபாளையம் அருகே சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் ராஜேந்திரன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த், ராஜேந்திரனின் தாயார் வேலம்மாளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது மகனின் நிலையைக் கண்டு கதறி அழுதார். இது குறித்து, வேலம்மாள் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) மேனகா வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காரில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; நூலிழையில் உயிர் தப்பிய காதலி; உடல் கருகி பலியான காதலன்!

கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் கல்லம்பெல்லா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து, தீ பற்றியது. காரிலிருந்த கார் ஓட்டுநரும், பெண்ணும் உயிர் தப்பிய நிலையில்,... மேலும் பார்க்க

பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா (5) ஆகிய இரட்டை குழந்தைகள். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில்உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும... மேலும் பார்க்க

`அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது... மேலும் பார்க்க

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து ... மேலும் பார்க்க

`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் வி... மேலும் பார்க்க