செய்திகள் :

`ஸ்டாலின் இப்படிச் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல' - சிபிஐ வீரபாண்டியன் விமர்சனம்!

post image

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ``எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எனவே, திமுக தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்" என உரையாற்றினார். இந்த நிலையில், பெரம்பூரில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாநில அரசு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தற்போதைய நிதிநிலை அதற்கு சரிவரவில்லை என்றால், அதுவரை விவசாயிகளிடம் கடன் வசூல் செய்யக் கூடாது என வலியுறுத்துகிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் போதுமானதாக இல்லை. அதை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஸ்டாலின் - கருணாநிதி
ஸ்டாலின் - கருணாநிதி

செல்வ வளங்களை உருவாக்கி உயர்த்தும் ஏழை, எளிய உழைப்போரின் கோரிக்கைகளை சிபிஐ முன்மொழிகிறது. ஜனநாயகத்தைக் காக்க இடதுசாரிகள் தனித்தும், அல்லது கூட்டணியுடனும் களமாட முடியும். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதை மதிக்கிறோம். எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பழுத்த அரசியல் தலைவர். கலைஞரிடம் அரசியல் பயின்றவர். இப்போதுதான் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது.

இது மக்களின் முடிவு. இதை மதிக்க வேண்டும். எனவே, அவரும் ஜனநாயக முறையில் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என அவர் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல. இந்த ஆட்சி அமைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அதிமுக - திமுக போன்ற கட்சிகளின் அனுபவம் வேறு என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். புதிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``முதல்வர் கரூர் செல்லவிருப்பதாக எழுந்த செய்திகள் வெளியாகின்றன. முதலமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவ... மேலும் பார்க்க

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல...' - தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த, சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாட... மேலும் பார்க்க

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதற்கு முன் 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வழங்கிய புதிய பதவிகளை ஏற்க மாட்டோம்' - அதிருப்தி நிர்வாகிகள் `திடீர்' முடிவு?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்றும், இதுகுறித்து அவருக்கு நேரடியாக கடிதம் அனுப்பவும் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநா... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' - முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மலையில் துளைத்திருந்த ராணுவ வெடிகுண்டு - பாதுகாப்பான முறையில் அழித்த நிபுணர் குழு!

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த புங்கனூர் ஊராட்சி வெள்ளங்குளம் கிராமத்திலுள்ள வரதேசி மலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விறகுகளை சேகரிப்பதற்காக மலைப் பகுதியில் ஏறினார். அப்போது, ... மேலும் பார்க்க