செய்திகள் :

ராணிப்பேட்டை: மலையில் துளைத்திருந்த ராணுவ வெடிகுண்டு - பாதுகாப்பான முறையில் அழித்த நிபுணர் குழு!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த புங்கனூர் ஊராட்சி வெள்ளங்குளம் கிராமத்திலுள்ள வரதேசி மலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விறகுகளை சேகரிப்பதற்காக மலைப் பகுதியில் ஏறினார். அப்போது, மண்ணில் துளைத்திருந்த நிலையில், இரும்பினாலான ஒரு மர்ம பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி, கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் வெங்கடேசன் தகவல் தெரிவித்தார். முன்னாள் ராணுவ வீரரும் மலைப் பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் `மோட்டார் வகை வெடிகுண்டு’ எனத் தெரியவந்தது.

வெடிகுண்டு

உடனடியாக, திமிரி காவல் நிலையப் போலீஸாரிடம் தெரியப்படுத்தினர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அங்குசென்று ஆய்வு செய்தனர்.

சுற்று பரப்பில், வெடித்த நிலையில் ஒரு குண்டும், வெடிக்காத நிலையில் மண்ணில் துளைத்திருந்த ஒரு குண்டும் இருப்பதை கண்டறிந்தனர். அதனருகில், மக்கள் யாரும் செல்லாத வகையில் குண்டைச் சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

விசாரணையில், வரதேசி மலைப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் கடந்த 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டு, ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதும், முகாம் நிறைவுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக வெடிக்காத அந்த குண்டு விட்டுச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இந்த வகை மோட்டார் வெடிகுண்டுகள், பதுங்கு குழிகளை அழிக்கவும், எதிரிகளை முன்னேற விடாமல் தடுக்கவும் ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அழிக்கப்பட்ட வெடிகுண்டு

இது குறித்து, சென்னையிலுள்ள ராணுவ முகாம் அலுவலகத்துக்கு போலீஸார் தகவல் கூறினர். இதையடுத்து, இன்று 5 பேர் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் வரதேசி மலைப் பகுதிக்கு வந்தனர்.

முறையான முன்னேற்பாடுகளை செய்து, அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து முழுவதுமாக அழித்தனர். இந்த நடவடிக்கையால், அப்பகுதியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கின்றனர்.

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' - முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியு... மேலும் பார்க்க

'கரூருக்கு செல்ல முடிவெடுத்த முதல்வர் விஜய்?' - முழு விவரம் என்ன?

முதல்வர் விஜய் கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.Vijayகடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நாம... மேலும் பார்க்க

அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகும், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்! இதற்கான '5' காரணங்கள் என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும்... மேலும் பார்க்க

`தொண்டை சரியில்ல' - ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

மாண்புமிகு இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு விழா!

காரைக்குடி வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Chamber of Commerce and Industries, Karaikudi) சார்பில், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வள துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு... மேலும் பார்க்க

'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் ம... மேலும் பார்க்க