செய்திகள் :

`நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?'- நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம் என்ன?

post image

அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ' காலம் முடிவு செய்துவிட்டது.

கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது' என்று நிர்வாகி வீரமணி என்பவர் பேசியிருந்தார்.

இது இணையத்தில் வைரலான நிலையில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரபூர்வ விளக்கமளித்திருக்கிறது.

சூர்யா
சூர்யா

நற்பணி இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு.இரா.வீரமணி அவர்கள்,

`இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை யாரும் நம்பவோ. பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு. இரா.வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், திரு.சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை.

சூர்யா
சூர்யா

அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.

மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் திரு.R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் திரு.G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Resort: "தாத்தா பெயரை யூஸ் பண்ணினால் எனக்கு பிரஷர் வந்திடும்!" - கே.பாலசந்தர் பேரன் விஷ்ணு பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது 'ரெசார்ட்' சீரிஸ். அந்த சீரிஸில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் தன்யா மற்றும் விஷ்ணு பாலாவை நம் டெலி விகடன் சேனலுக்காகப் பேட்டி கண்டோம். மறைந்த இ... மேலும் பார்க்க

ரஜினி - விஜய் குறித்த பேச்சு: `நான் பின் வாங்கப்போவதில்லை' - விளக்கம் அளித்த விஷ்ணு விஷால்

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் ... மேலும் பார்க்க

வேலூர் கம்பன் கழகம் - ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழா!

வேலூர் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழாவினைச் சிறப்பாக நடத்தின. விழாவிற்கு வேலூர் கம்பன் கழகத்தின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் து... மேலும் பார்க்க

"அந்த இடம் சர்கஸ் கூடாரம் போல இருந்தது" - பாக்யராஜின் இறுதி அஞ்சலி குறித்து ராதிகா சரத்குமார்

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்யராஜ் நேற்று முன்தினம் (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜ் மறைந்த நாளிலேயே அவரது உடல் ... மேலும் பார்க்க

பாக்யராஜ்: 'வெள்ளாங்கோயில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சினிமா கனவுகளைச் சுமந்தவர்' - பகிரும் கிராமம்

தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.அவரின் மற... மேலும் பார்க்க

What To Watch: 'Con City' முதல் 'அவதார்' வரை; இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.கான் சிட்டி - தமிழ்ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி... மேலும் பார்க்க