செய்திகள் :

"அந்த இடம் சர்கஸ் கூடாரம் போல இருந்தது" - பாக்யராஜின் இறுதி அஞ்சலி குறித்து ராதிகா சரத்குமார்

post image

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்யராஜ் நேற்று முன்தினம் (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

பாக்யராஜ் மறைந்த நாளிலேயே அவரது உடல் மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, யூடியூப் சேனல்கள், புகைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கேமராக்களுடன் சூழ்ந்து கொண்டனர்.

பாக்கியராஜ்
பாக்யராஜ்

இதனால் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த நேரத்தில் மிகவும் உடைந்த மனநிலையிலிருந்த நடிகை ராதிகா, கண்ணீருடன் ஊடகங்களை நோக்கி, "உங்களுக்கு டி.ஆர்.பி. வேண்டுமென்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம். ஆனால் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தயவு செய்து கெடுக்காதீர்கள்" என்று கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொண்டார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலர் ராதிகாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், சிலர் அவர் மீது விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் ராதிகா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "50 ஆண்டுகால விசேஷமான நட்புக்கு எனது இறுதி விடைபெறுதல். பாக்யராஜ் சார் ஒரு சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர் மற்றும் சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்த ஒரு மனிதர். அவருடன் நான் பல மகிழ்ச்சியான தருணங்களையும், அற்புதமான படைப்புகளையும் பகிர்ந்திருக்கிறேன்.

எனது குடும்பத்திற்கு எப்போதும் தனது அமைதியான, விசுவாசமான வழியில் உறுதுணையாக நின்றவர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியளிக்கும் விடைபெறுதல்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

அனைவரும் மற்ற விஷயங்களை மறந்து, அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய ஒரு இடம், சர்கஸ் கூடாரம் போல இருந்தது. எப்போது, எங்கே நாம் இந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக மாறினோம் அல்லது மாற்றப்பட்டோம்?

அரசாங்கமும், சினிமாத்துறையும் ஒன்றிணைந்து அமர்ந்து, இதற்கான நெறிமுறைகளையும் கூட்டு நிர்வாகத்தையும் வகுக்க வேண்டும். மேலும், மறைந்த அந்த ஆன்மாவிற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாக்யராஜ்: 'வெள்ளாங்கோயில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சினிமா கனவுகளைச் சுமந்தவர்' - பகிரும் கிராமம்

தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.அவரின் மற... மேலும் பார்க்க

What To Watch: 'Con City' முதல் 'அவதார்' வரை; இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.கான் சிட்டி - தமிழ்ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி... மேலும் பார்க்க

பாக்கியராஜ்: காலை 9 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Live Updates

அரசு மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று என்றழைக்கப்படும் கே. பாக்கியராஜ் நேற்று (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். 'சுவரில்லாத சித்திரங்கள்' மூலம் இயக்கு... மேலும் பார்க்க

பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' - ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ... மேலும் பார்க்க

Bhagyaraj: `இசையமைப்பாளர் பாக்யராஜ்' - `இது நம்ம ஆளு' டு `ஞானப்பழம்' படம் - சுவாரஸ்ய தகவல்!

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பப் பின்னணியைக் கொண்ட அவரின் படங்கள் பல... மேலும் பார்க்க