செய்திகள் :

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

post image

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர் வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது MLA-வாக பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த முடிவு அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஏற்கனவே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்தால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 41 ஆக குறையும்.

மேலும், திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயரவுள்ளது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌ... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.தமிழ்நாடு அரசின் உத்தரவு...சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: ர... மேலும் பார்க்க

மதுரை: `குப்பைகளுக்கு பதில் மணல்'- தனியார் நிறுவனம் மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.அதன் பின்னர் செய்திய... மேலும் பார்க்க

பினராயி விஜயன் வீட்டுக்கு முன் கார் உடைக்கப்பட்ட வழக்கு; அரசு வக்கீல் மீது அமலாக்கத்துறை அதிருப்தி

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகளின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி இடையே பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள... மேலும் பார்க்க

"125 நாள்கள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு எங்கே?" - மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி | Live Updates

125 நாள்கள் வேலை - பெ.சண்முகம் கேள்விஜூலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு, அதற்கான நிதி குறித்து விமர்சனம் எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க