செய்திகள் :

ஆபரேஷன் தூஃபான்: தாய்லாந்திலிருந்து ஹைபிரிட் கஞ்சா கடத்தல்; சர்வதேச கும்பலை கைதுசெய்த கேரள போலீஸ்!

post image

கேரள மாநிலத்தில் ஆபரேஷன் தூஃபான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக எர்ணாகுளம் மாவட்டம், மாறம்பிள்ளி குன்னுவழிப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், பைக்கில் கடத்தப்பட்ட 1.166 கிலோ கிராம் ஹைபிரிட் கஞ்சாவுடன் ஆயுஷ் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். ​அவர் வசித்த ஃபிளாட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் 16 கிலோ ஹைபிரிட் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய அவரின் மனைவி அனிகா (30) கைதுசெய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட ஹைபிரிட் கஞ்சா மிகவும் வீரியமிக்கது எனவும், சர்வதேச அளவில் அதன் மதிப்பு 18 கோடி ரூபாய் எனவும் போலீஸார் கண்டறிந்தனர். எர்ணாகுளம் ரூரல் மாவட்டத்தில் சமீபத்தில் பிடிக்கப்பட்ட அதிக மதிப்புகொண்ட போதைப்பொருள் இதுதான் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை முழுமையாக கண்டுபிடிக்கும் விதமாக எர்ணாகுளம் ரேஞ்ச் டி.ஐ.ஜி யதீஷ் சந்திராவின் மேற்பார்வையில், ரூரல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ​இந்தத் தனிப்படையில் பெரும்பாவூர் ஏ.எஸ்.பி ஹர்திக் மீனா மற்றும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் இடம்பெற்றிருந்தனர். தனிப்படை விசாரணை நடத்தி இந்த கும்பலைச் சேர்ந்த பாலக்காடு முண்டூர் புதனூர் பள்ளிப்பறம்பில் பகுதியைச் சேர்ந்த அபு தாஹிர் (39), ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25), பாலக்காடு கடம்பழிப்புறம் அத்தாணிப்பறம்பில் பகுதியைச் சேர்ந்த பிரஜித் (40), ஸ்ரீஜேஷ் (41) மற்றும் சஞ்சய் (22) ஆகியோரைக் கைதுசெய்தனர்.

டி.ஐ.ஜி யதீஷ் சந்திரா

இது பற்றி போலீஸார் கூறுகையில், "இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படும் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து இந்தகுற்றவாளிகள் சிக்கியுள்ளனர். இவர்கள் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் வழியாகக் கேரளாவுக்கு ஹைபிரிட் கஞ்சா கடத்தி வரும் சர்வதேச போதைப்பொருள் கும்பலின் உயர் மட்டத் தலைவர்கள் ஆவார்கள். போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கின் முக்கிய குற்றவாளியான அபு தாஹிரை பெங்களூரில் வைத்து கைதுசெய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொபைல் போன்கள், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், வெளிநாட்டுப் பயண ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள்

கைதுசெய்யப்பட்ட அபு தாஹிரும், ஹரிகிருஷ்ணனும் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள்களைக் கடத்திவரும் ஏஜென்ட்டுகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்துவந்துள்ளனர். இவர்கள்தான் ஏஜென்ட்டுகள் வெளிநாடு செல்வதற்கான விசா, விமான டிக்கெட் மற்றும் கமிஷன் தொகை கொடுத்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெளிநாடு சென்று திரும்பும் ஏஜென்ட்டுகள், ஹைபிரிட் கஞ்சாவைக் கடத்தி வருவார்கள். பெரும்பாலும் தாய்லாந்தில் இருந்துதான் போதைப்பொருள்களைக் கடத்திவருகிறார்கள். ஏஜென்ட்டுகள் கடத்திவரும் போதைப்பொருள்களை விமான நிலையத்திற்கு வெளியே வைத்து இந்தக் கும்பல் பெற்றுக் கொள்ளும். பின்னர் போதைப்பொருளை பிரித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் விற்பனைக்காக பிரித்து அனுப்புகின்றனர்" என்றனர்.

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து ... மேலும் பார்க்க

`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் வி... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டு... மேலும் பார்க்க

முஹர்ரம்: ``15,000 பேரைக் கொல்ல சதி செய்தேன்" - விஷ மாத்திரைகள் விநியோகித்தவர் பரபரப்பு வாக்குமூலம்

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ``மொஹர்ரம் ஊர்வலத்தைக்... மேலும் பார்க்க

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?

சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த ம... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட பெண் தாசில்தார்; வீட்டில் ரூ.5 கோடி, தங்கம், வைரம் பறிமுதல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகொம்மா சுசரிதா. இவர் சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ... மேலும் பார்க்க