செய்திகள் :

ஆய்வுக்குப் போன இடத்தில் அரசு வாகனத்தில் ரீல்ஸ்; சர்ச்சையில் சத்தியமங்கலம் தாசில்தார்

post image

ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் வரம்புகளை மீறி பணி நேரங்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதும் அதனை சோசியல் மீடியாக்களிலும் பகிர்வதும் அண்மைக்காலமாகத் தொடர்ந்து வருகின்றன.

அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தின் வட்டாட்சியர் ஜமுனா ராணி, அண்மையில் ஆய்வு பணிகளுக்காக கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

தாசில்தாருக்கான அரசு வாகனத்தில் சென்ற அவர், நடுவழியில் சாலையில் வாகனத்தை நிறுத்தி கடம்பூர் மலை அழகைக் கண்டு ரசித்திருக்கிறார். அதோடு நிற்காமல் 'ஜவ்வாது பெண்ணானது' என்கிற சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார்.

வட்டாட்சியர் ஜமுனா ராணி
வட்டாட்சியர் ஜமுனா ராணி

'மாவட்டத்தில் ஆட்சியருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய வட்டாட்சியர் ஒருவர் பணி நேரத்தில் வரம்புகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு உயர் அதிகாரிகள் முறையாக நெறிமுறைப்படுத்த வேண்டும்' எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

'அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே' என கமெண்ட்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ‌.

'இஸ்லாம் மதத்திற்கு மாறினால் பிற்படுத்தபட்ட வகுப்பு சான்றிதழ் கிடையாது’ - நீதிமன்றம் சொல்வது என்ன?

தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “என் இயற்பெயர் பரமசிவம். நான்இந்துப் பெற்றோருக்குப் பிறந்து, இஸ்லாம் மதத்தைத் தழுவி என்னுடைய ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: இடிந்து விழும் கூரைகள்; மழை வந்தால் குளமாகும் வீடு; பயத்துடன் வாழும் பழங்குடியினர்

"இருபது ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்திடும் என்று பயத்துடன் வாழும் எங்கள் பிரச்சனையை அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள் பட்டியல் பழங்கு... மேலும் பார்க்க

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுத... மேலும் பார்க்க

'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது. என்ன காரணம்? கணினி மேம்பாட்டு... மேலும் பார்க்க

கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் பின்தங்கும் இந்தியா... நிதி ஆயோக் எச்சரிக்கை, செவிசாய்க்குமா அரசு?

வேகமாக வளரும் பொருளாதாரம், டிஜிட்டல் புரட்சி, வேறெந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரும் இளைஞர் வளம் என்று நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி களில்... மேலும் பார்க்க

'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச் சென்றது.ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்திய ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து, ரூ.94-95-க்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மிக முக... மேலும் பார்க்க