செய்திகள் :

முஹர்ரம்: ``15,000 பேரைக் கொல்ல சதி செய்தேன்" - விஷ மாத்திரைகள் விநியோகித்தவர் பரபரப்பு வாக்குமூலம்

post image

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

``மொஹர்ரம் ஊர்வலத்தைக் குறிவைத்து, எலி விஷமாகப் பயன்படுத்தப்படும் 'சிங்க் பாஸ்பைடு' (Zinc Phosphide) நிரப்பப்பட்ட மாத்திரைகளை விநியோகித்து, குறைந்தது 15,000 பேரைக் கொல்வதே எனது நோக்கம்" என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக NDTV தெரிவித்திருக்கிறது. இந்தப் பெரும் சதியை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரேம்ஜி
கைது செய்யப்பட்ட பிரேம்ஜி

பைகுல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்குச் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் மாத்திரைகளை விநியோகிப்பதைக் கவனித்து அவரைப் பிடித்தார்.

இதுகுறித்து மத்திய மண்டலம்-1-ன் துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் மீனா கூறுகையில், ``அதிகாலை 4 மணியளவில், சல்மான் என்ற நபர் இந்த மாத்திரைகளில் ஒன்றை உட்கொண்டதால் வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு அடைந்தார். இந்தச் சம்பவத்தை முதலாகக் கொண்டு தீவிரமாகப் புலனாய்வு செய்த காவல்துறை, சந்தேக நபரான பிரேம்ஜியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

மாத்திரைகளை பெயின் கில்லர் என்று பொய் கூறி விநியோகம் செய்து, பெருமளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தச் சதி செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பெயிண்ட் வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் தொடர்புகளைப் பயன்படுத்தி 50 கிலோ சிங்க் பாஸ்பைடு கெமிக்கலையும், ஆன்லைன் மூலமாக 30,000 வெற்று மாத்திரை உறைகளையும் (Empty Capsules) வாங்கியுள்ளார்.

கடந்த 15 நாள்களாக மும்பையில் தங்கியிருந்து இந்த நச்சு மாத்திரைகளை அவர் தயாரித்துள்ளார். இதுவரை 14,900 விஷ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய மாத்திரைகள் மற்றும் ரசாயனங்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது

காவல்துறையினரின் துரிதமான மற்றும் விழிப்புணர்வான செயல்பாட்டினால், ஏற்படவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதமும், பேரழிவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் வெளிநாட்டுப் பயணப் பின்னணி குறித்தும், இந்தச் சதித் திட்டத்தில் மும்பையில் உள்ள வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்." என்றார்.

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?

சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த ம... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட பெண் தாசில்தார்; வீட்டில் ரூ.5 கோடி, தங்கம், வைரம் பறிமுதல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகொம்மா சுசரிதா. இவர் சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ... மேலும் பார்க்க

பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?

பெங்களூர் கே.எஸ்.புரத்தை சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை உட்பட மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அதன்பிறகு சுவேதாவையும் அவரது க... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவத... மேலும் பார்க்க

`அவள் அந்த தவறை செய்திருந்தால், அதே மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்' - மணமகனை கொன்ற பெண்ணின் தாய்

புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன்... மேலும் பார்க்க

சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் - செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது. உடல்நலக்குறைவ... மேலும் பார்க்க