செய்திகள் :

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?

post image

சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த முடியாத நிலையில், குழந்தைகளைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தம்பதிக்கு கடந்த 19 - ம் தேதி அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வறுமை காரணமாக இந்தப பெண் குழந்தையை வளர்க்க முடியாது எனக் கருதிய பெற்றோர் , குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு வெளியில் தெரியாமல் விற்பனை செய்திருக்கிறார்கள்.

குழந்தை விற்பனை

சட்டவிரோதமாக நடந்த இந்தக் குழந்தை விற்பனை குறித்து கொண்டலாம்பட்டி காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.‌ பிறந்து ஏழு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கிச் சென்ற ராமநாதபுரம் தம்பதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.‌ ராமநாதபுரத்தில் இருந்து சேலத்திற்கு காரில் குழந்தையை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். வறுமை காரணமாக குழந்தையை விற்றனரா அல்லது குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் புரோக்கர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட பெண் தாசில்தார்; வீட்டில் ரூ.5 கோடி, தங்கம், வைரம் பறிமுதல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகொம்மா சுசரிதா. இவர் சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ... மேலும் பார்க்க

பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?

பெங்களூர் கே.எஸ்.புரத்தை சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை உட்பட மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அதன்பிறகு சுவேதாவையும் அவரது க... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவத... மேலும் பார்க்க

`அவள் அந்த தவறை செய்திருந்தால், அதே மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்' - மணமகனை கொன்ற பெண்ணின் தாய்

புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன்... மேலும் பார்க்க

சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் - செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது. உடல்நலக்குறைவ... மேலும் பார்க்க

தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

கல்லூரியில் படித்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க