செய்திகள் :

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன?

post image

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட்.

ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்பது அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதே ரூல் தான் பான் கார்டு, வாக்காளர் அட்டைக்கும். என்னது வாக்காளர் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லையா என்று ஷாக் ஆகாதீர்கள்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

இந்தியர்கள் மட்டுமே வாக்காளர் அட்டை பெற முடியும் என்றாலும், வாக்காளர் அட்டையை முழுமையான குடியுரிமை ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது.

ஆனால், மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் தான் நாம் இதுவரை பல இடங்களில் ப்ரூஃப் ஆக காட்டிக் கொண்டிருக்கிறோம். அவை அனைத்தும் அடையாளம் மற்றும் முகவரிக்கான ப்ரூஃப் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவற்றை குடியுரிமைக்கான ப்ரூஃப்பாக எங்கேயும் காட்ட முடியாது.

அப்போது எது தான் குடியுரிமைக்கான ஆதாரம்?

பிறப்பு சான்றிதழ் - இது மிக மிக முக்கியமானது. ஏனெனில் இது பிறந்த தேதி, பிறந்த இடம் அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும். அதனால், இது முக்கியமான குடியுரிமை சான்றிதழாக கணக்கில் எடுத்துகொள்ளப்படுகிறது.

குடியுரிமை சான்றிதழ் - இது இந்திய அரசால் வழங்கப்படும் நேரடி குடியுரிமை ஆவணம்.

இந்தியா
இந்தியா

Naturalisation சான்றிதழ் - வெளிநாட்டுக் குடியிரிமையில் இருந்து ஒருவர் இந்திய குடியுரிமைக்கு மாறினால் கொடுக்கப்படும் ஆவணம் இது.

பதிவு சான்றிதழ்: குடியுரிமை சட்டத்திற்குக் கீழ், குடியுரிமைக்காக வழங்கப்படும் ஆதாரம் இது.

ஆக, இவற்றை மட்டுமே குடியுரிமைக்கான ஆதாரமாக காட்ட முடியும். இந்தியாவில் குடியுரிமைக்கான ஆதாரம் என்று பிரத்யேகமாக... அனைவருக்குமான எந்த ஆவணமும் இல்லை.

மற்றதையெல்லாம் ஏன் குடியுரிமைக்கான ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது?

வெளிநாட்டினர் கூட ஆதார் கார்டு, பான் கார்டை பெற முடியும். அதனால், அந்த இரண்டையும் குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது.

பாஸ்போர்ட் பெறும் போது, போலி ஆவணங்கள் பிரச்னைகள் இருப்பதால், அதை குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக, பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20-ன் படி, பொது நலத்திற்காக இந்திய அரசு இந்தியர் அல்லாதோருக்கும் பாஸ்போர்ட் வழங்க முடியும்.

'ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். வெங்கட நாராயணாதிரையுலகில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை தயார... மேலும் பார்க்க

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' - அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக திரும்பிட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தோல்விக்கான காரணங்கள் அறிக்கையாக கட்சித் தலைமைக்குச் சமர்ப்... மேலும் பார்க்க

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' - கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும... மேலும் பார்க்க

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' - விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிற... மேலும் பார்க்க

`எனக்கெதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாட்டுக்கு தான் போவீர்கள்!'- அணிமாறிய உத்தவ் எம்.பி மிரட்டல்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவினர். அவர்களுக்கு மாநில அரசு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்ப... மேலும் பார்க்க

பெ.சண்முகம்: "போர் யானை சும்மா இருக்காது" - முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவ... மேலும் பார்க்க