செய்திகள் :

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' - அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

post image

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக திரும்பிட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தோல்விக்கான காரணங்கள் அறிக்கையாக கட்சித் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில், சட்டசபைக்குள் ஆளுங்கட்சியை எதிர்க்கும் அரசியலாகட்டும், கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை லெஃட் அன்ட் ரைட் விடுவதாகட்டும் அதன் தலைவர்கள் இறங்கி ஆடத் தொடங்கியிருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் மதியழகனின் இல்லத் திருமண விழாவில் பேசிய ஆ.ராசா, 'இனி கூட்டணியே தேவையில்லை' என்கிற முடிவை எடுக்க வேண்டுமெனப் பேசியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் கோபாலபுரக் குடும்பத்துக்குள்ளும் ஏக சலசலப்புகளும் பரபரப்புகளும் தினந்தினம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றனவாம்.

அவற்றின் தொடர்ச்சியாக கட்சித் தலைமைக்கு gen Z தலைமுறையினரை கவர புதியதொரு ஆலோசகர் நியமனமும் நடந்திருப்பதாக நம்பிக்கையான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

இன்றைய தலைமுறையிடம் கட்சியைக் கொண்டு செல்ல வெறும் ஐ.டி விங்கை மட்டும் நம்பினால் போதாது என்கிற முடிவுக்கு வந்து விட்டதாம் தலைமை. கட்சி ஐ.டி விங்கின் கடந்த கால செயல்பாடே தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைமையின் குடும்பத்துக்குள் பிரச்னைக்கும் காரணமானது என்கிறார்கள்.

எனவே சமூகத்தின் நடப்பு ட்ரென்டிங்கை அறிந்து, அதற்கேற்றபடி கட்சியின் செயல்பாட்டை அமைக்க நினைத்த கட்சி, அதற்கு ஆலோசனைகள் வழங்க பொருத்தமான நபராகப் பார்த்திருப்பது, விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வாய்ஸ் கொடுத்து வருகிற‌ சாஷோ என்கிற சதிஷ் சாரதி என்கிறார்கள்.

Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin

டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகர் என்பதைத் தாண்டி லைஃப்ஸ்டைல் கன்சன்டன்ட் என்கிற பெயரில் மனவளம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கி வருகிற இவர், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதியைச் சில தினங்களுக்கு முன் சந்தித்து பேசியதாகவும் தகவல்.

பிக்பாஸ் வீட்டில் எல்லோரையும் கன்ஃபெஷன் ரூம்க்கு வாங்க எனக் கூப்பிடும் பிக்பாஸ் அறிவாலயத்தின் கன்சல்டன்ட் ரூம்க்கு வந்திருப்பது திமுகவினர் மத்தியில் புதிய உத்வேகத்தைப் பாய்ச்சுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட். ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது ... மேலும் பார்க்க

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' - கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும... மேலும் பார்க்க

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' - விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிற... மேலும் பார்க்க

`எனக்கெதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாட்டுக்கு தான் போவீர்கள்!'- அணிமாறிய உத்தவ் எம்.பி மிரட்டல்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவினர். அவர்களுக்கு மாநில அரசு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்ப... மேலும் பார்க்க

பெ.சண்முகம்: "போர் யானை சும்மா இருக்காது" - முரசொலிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவ... மேலும் பார்க்க

'CM சும்மா 50மீ ஓடுவாருன்னு நினைச்சோம்.!' - முதல்வருடன் மாரத்தானில் ஓடிய வீராங்கனைகள் நெகிழ்ச்சி!

'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்த... மேலும் பார்க்க