செய்திகள் :

டெல்லி சிறப்புப் பிரதிநிதி: ``முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' - சிபிஐ வீரபாண்டியன்

post image

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சிபிஐ கட்சியும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் - கே.வெங்கட நாராயணா
விஜய் - கே.வெங்கட நாராயணா

இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிந்து கொள்ளல் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே அடுத்த லட்சியம்" - மாணிக்கம் தாகூர் உறுதி

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாளை அவர் புதிய தலைவராகப் பதவியேற்க இர... மேலும் பார்க்க

திருவாரூர்: '50 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லை' - வயல் வழியாக எடுத்துச் செல்லப்படும் அவலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுககுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரைச் சார்ந்த 380-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால், அவ்வூரில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டிற்கு... மேலும் பார்க்க

"காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது; அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று கும்பகோணத்தில் நடைபெறுகிற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி ... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெள... மேலும் பார்க்க

மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? - கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் விளக்கம்

மதிமுக பொதுக்குழுக்கூட்டம் நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவ... மேலும் பார்க்க