செய்திகள் :

இந்தியா - வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா

post image

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.

வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றிருந்தபோது, அரசு நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு மிக அருகில், வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மோங்லா துறைமுகத்தின் அருகே பொருளாதார மண்டலத்தை சீனா மேம்படுத்தவுள்ளது.

தாரிக் ரஹ்மான் | Tarique Rahman
தாரிக் ரஹ்மான் | Tarique Rahman

முன்னதாக, முந்தைய ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் இந்த 110 ஏக்கர் நிலம் இந்தியப் பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்தியாவின் ஹிரானந்தானி குழுமமும் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, "இந்திய நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளைத் தொடங்கவில்லை" எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்து செய்தது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு இது இரண்டு வழிகளில் பின்னடைவாகும். முதலாவதாக, இந்தியாவின் கைகளில் இருந்த மிக முக்கியமான திட்டம் கை நழுவியுள்ளது. இரண்டாவதாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் சீனாவின் ராணுவ மற்றும் உளவு கண்காணிப்பு நடமாட்டத்திற்கு இது வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

சீனா ஏற்கனவே தனது 'கடல்சார் பட்டுப்பாதை' திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாடர் முதல் ஜிபூட்டி வரை 17 துறைமுகத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. தனது 80% கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியப் பெருங்கடலையே நம்பியிருப்பதால், சீனா மோங்லா துறைமுகத்தைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியுள்ளது.

மோடி
மோடி

இத்துடன், இந்தியாவுக்குப் பாதுகாப்பு ரீதியாக மிகவும் உணர்வுப்பூர்வமான பகுதியான 'சிக்கன்ஸ் நெக்' (சிலிகுரி காரிடார்) அருகே உள்ள தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திலும் சீனாவுடன் இணைந்து செயல்பட வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

"காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது; அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று கும்பகோணத்தில் நடைபெறுகிற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி ... மேலும் பார்க்க

மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? - கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் விளக்கம்

மதிமுக பொதுக்குழுக்கூட்டம் நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவ... மேலும் பார்க்க

"ஈரான் நாடே இருக்காது" - மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய ஈரான்- அமெரிக்கா; எச்சரிக்கைக்கும் ட்ரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 17-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), வினாத்தாள் கசிவு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தானே பகுதியில் சில நபர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் இருப்பதாக ம... மேலும் பார்க்க

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் ... மேலும் பார்க்க