செய்திகள் :

கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள்

post image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும், இந்தியாவில் ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கேட்டுள்ள மூன்று கேள்விகள்...

"பாஜகவின் பகற்கொள்ளை மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் குணம் -

கச்சா எண்ணெய் விலை பாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருக்கிறது,

இருந்தும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைத்து மக்களுக்கு நிம்மதி தருவதற்குப் பதிலாக...

பெட்ரோல்
பெட்ரோல்

மோடி அரசு மக்களின் சேமிப்பைப் பிழிந்தெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறது

எங்களது மூன்று கேள்விகள் -

1. மேற்கு ஆசியாவில் போர் உச்சத்தில் இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $138 டாலராக இருந்தது.

அப்போதே பெட்ரோல் ₹94.77-க்கும், டீசல் ₹87.67-க்கும் விற்கப்பட்டது.

இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $70.71 டாலராகக் குறைந்துவிட்டது.

அப்படியிருந்தும் மோடி அரசு ஏன் இன்னும் பெட்ரோலை ₹102.12-க்கும், டீசலை ₹95.20-க்கும் விற்றுக் கொண்டிருக்கிறது?

2. போரைக் காரணம் காட்டி, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை பாஜக அரசு இருமடங்காக உயர்த்தியது.

இப்போது விநியோகம் சீராகிவிட்ட பிறகும், எல்பிஜி விலையை ஏன் பழையபடி குறைக்கவில்லை? பொதுமக்களுக்கு ஏன் ஒரு பைசா கூட நிம்மதி கிடைக்கவில்லை?

3. வீட்டு உபயோக சிலிண்டர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பயன்படும் 5 கிலோ சிறிய சிலிண்டர்கள், மற்றும் சிஎன்ஜி என எல்லாவற்றின் விலையையும் ஏற்றிவிட்டார்கள்.

இப்போது நிலைமை சாதாரணமாகிவிட்ட பிறகும், விலையைக் குறைப்பதற்கு மோடி அரசின் கைகள் ஏன் நடுங்குகின்றன?

கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும் பொதுமக்கள்தான் அவதிப்பட்டார்கள். இப்போது கச்சா எண்ணெய் விலை மலிவாக இருக்கும்போதும் ஏன் பொதுமக்களே சுமையைத் தாங்க வேண்டும்?

விஷயம் மிகத் தெளிவு — பாஜகவுக்கு வரி என்ற பெயரில் பணத்தைப் பிடுங்குவதற்கும், கல்லா கட்டுவதற்கும் பொதுமக்கள் வெறும் ஒரு கருவியாக மட்டுமே மாறிவிட்டார்கள்!!"

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.தமிழ்நாடு அரசின் உத்தரவு...சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: ர... மேலும் பார்க்க

மதுரை: `குப்பைகளுக்கு பதில் மணல்'- தனியார் நிறுவனம் மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.அதன் பின்னர் செய்திய... மேலும் பார்க்க

பினராயி விஜயன் வீட்டுக்கு முன் கார் உடைக்கப்பட்ட வழக்கு; அரசு வக்கீல் மீது அமலாக்கத்துறை அதிருப்தி

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகளின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி இடையே பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள... மேலும் பார்க்க

"125 நாள்கள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு எங்கே?" - மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி | Live Updates

125 நாள்கள் வேலை - பெ.சண்முகம் கேள்விஜூலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு, அதற்கான நிதி குறித்து விமர்சனம் எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

சீர்காழி: 'இன்னொரு தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை?' - மதிமுக MLA செந்தில் செல்வன் திட்டம் என்ன?

திமுக கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறது என்று வைகோ அறிவித்து விட்டார். தவெக அரசுடன் வைகோ, துரை வைகோ இருவரும் காட்டிய நெருக்கத்தால் இது நடக்... மேலும் பார்க்க

'விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு!'- கைவிரித்த ஆனந்த்; டென்ஷனில் முதல்வர்; பரிதவிப்பில் அமைச்சர் சரத்?

மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்தான் கடந்த நான்கு நாட்களாக சமூகவலைதளங்களின் ஹாட் டாபிக். சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளை பயன்படுத்துவதை போல அவர் வெளியிட்டிருந்த வீடியோ, இப்போது இணையத்தில் வைரலா... மேலும் பார்க்க