செய்திகள் :

ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய எஸ்.பி. வேலுமணி; அதிமுக-வில் இருந்து வெளியேற திட்டமா?

post image

அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தாலும் பழைய பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கட்சிக் கொடி, பேனர் எதுவும் இல்லாமல் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரின் புகைப்படங்கள்  மட்டும் வைக்கப்பட்டு இருந்தன. ஈபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டு இருந்தது.

அப்போது பேசிய அவர், “இதுவரை பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்குத்தான் மரியாதை அளித்து வருகின்றோம். சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பன்னீர் செல்வம் நம்முடன்  சேர்த்து இருந்திருந்தால், இன்னும் பலமாக இருந்திருக்கும். தேர்தலுக்குப் பின்பு தி.மு.க-வுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் பிரச்னை வந்தது.

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் ஆரமித்தது தி.முக-வை எதிர்க்கத்தான். தி.மு.க-வுடன் அ.தி.மு.க-வைச் சேர்ப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 47 எம்.எல்.ஏ-க்களில் 25 பேர் எங்களுடன் வந்தனர். அ.தி.மு.க-வைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தோம்.

தி.மு.க-வுடன் யார் போனாலும் ஏற்கமாட்டோம். 30 மாவட்டச் செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க-வை அழிவு பாதையில் கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதுதான் என் கருத்து. இப்பவும் இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் மீண்டும் எடப்பாடியாரிடம் வந்தோம், இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும்.

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி
வேலுமணி, எடப்பாடி பழனிசாமி

21 வருடமாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கின்றேன், கட்சியில் சாதாரண உறுப்பினராக இருப்பேன், என்னை நம்பி வந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். தப்பு பண்ணினால் கண்டிப்பாகக் கேட்போம். தி.மு.க எதிர்ப்பு எப்போதும் இருக்கும்.

அதை எப்படி ஏற்க முடியும்? நீங்க என்ன முடிவு சொல்றீங்களோ அதைச் செய்வோம். என்னை நம்பி வந்தவர்களுக்குத் துணையாக இருப்பேன். பழையபடி பதவி இருந்தால் செயல்பட முடியும், பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என கேட்டோம், அது நடக்கவில்லை.

செங்கோட்டையன், ஓ.பி.எஸ், ஜெசிடி பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறினர். அதுபோல வெளியே செல்வேன் என நினைக்கின்றனர். அ.தி.மு.க தொடர் தோல்வியே சந்தித்து வந்தால் எதற்கு ஆகும்? தி.மு.க-வுடன் சேர்ந்து பயணிக்கலாம் என எண்ணம் இங்கு யாருக்காவது இருந்தால், கிளம்பிடுங்கள். இறுதி முடிவு நீங்கள் என்ன சொல்றீங்களோ, அதுவே எனது முடிவு” என்றார்.

பின்னர் காரில் கிளம்பிய வேலுமணியிடம் ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு, “எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம், அவ்வளவுதான்” எனப் பதிலளித்தார்.

சீர்காழி: 'இன்னொரு தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை?' - மதிமுக MLA செந்தில் செல்வன் திட்டம் என்ன?

திமுக கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறது என்று வைகோ அறிவித்து விட்டார். தவெக அரசுடன் வைகோ, துரை வைகோ இருவரும் காட்டிய நெருக்கத்தால் இது நடக்... மேலும் பார்க்க

'விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு!'- கைவிரித்த ஆனந்த்; டென்ஷனில் முதல்வர்; பரிதவிப்பில் அமைச்சர் சரத்?

மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்தான் கடந்த நான்கு நாட்களாக சமூகவலைதளங்களின் ஹாட் டாபிக். சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளை பயன்படுத்துவதை போல அவர் வெளியிட்டிருந்த வீடியோ, இப்போது இணையத்தில் வைரலா... மேலும் பார்க்க

'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பு... மேலும் பார்க்க

”அடுத்த சட்டமன்றத் தொடரில் Dance Performance இருக்கும்” - முதல்வர் விஜய்யைச் சாடிய உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் இரண்டு திமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் பேசியதாவது, ''... மேலும் பார்க்க

அமைச்சர் சரத் குமார் வீடியோ: ``விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்" - தமிழிசை

தவெக அமைச்சர் சரத் குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்... மேலும் பார்க்க

மேகதாது அணை: 'தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?' - ஜோதிமணி பதில்

கரூர் மாவட்டத்தில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். முன்னதாக, ஈசநத்தம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள... மேலும் பார்க்க