செய்திகள் :

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொலை தொடர்பாக ஷியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷியாவுக்கும், கேதனுக்கும் நவம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடப்பதாக இருந்தது.

ஆனால் அதற்குள் இப்படுகொலை நடந்துள்ளது. ஏறக்குறைய 10 நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஷியா கோயல் மற்றும் சேதன் சவுத்ரி இருவரும் நேற்று கொலை நடந்த மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு இருவரும் சேர்ந்து கொலையை எப்படி செய்தனர் என்பது குறித்து செய்து காட்டினர். இது குறித்து புனே கிராமப்புற போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் சிங் கில் கூறுகையில், ``குற்றத்தை மறுகட்டமைப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் லோஹாகட் கோட்டைக்கு, குறிப்பாக சம்பவம் நடந்த இடத்திற்கு, காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நிகழ்வுகளின் முழு வரிசையும் புனரமைக்கப்பட்டு வருகிறது. நடந்த பாதை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நின்ற இடம் மற்றும் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்ட விதம் குறித்து இருவரும் செய்து காட்டினர்''என்றார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு இரண்டு பேரும் தனித்தனியாக அழைத்து செல்லப்பட்டனர். கேதன் அகர்வால் எப்படி, எங்கிருந்து தள்ளப்பட்டார் என்பது குறித்து குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுக்களை சரிபார்க்க மறுகட்டமைப்பு உதவும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரும் லோஹாகட் மலை பகுதியில் என்னென்ன காரியங்களை எப்படியெல்லாம் செய்தனர் என்பதை இருவரும் செய்து காட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கேதன் அகர்வாலை எப்படி மலையிலிருந்து தள்ளிவிட்டார்கள், அந்தச் செயலுக்கு முன் ஷியா கோயல் கொடுத்ததாகக் கூறப்படும் சமிக்ஞை மற்றும் கோட்டையில் சேதன் சௌத்ரி தம்பதியினரை எப்படிப் பின்தொடர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இது போன்ற ஒரு ஒத்திகை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த ஒத்திகைக்காக லோஹாகட் கோட்டை நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஷியாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரனிடமும் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். போலீஸாரின் விசாரணையில், சேதனும் ஷியாவும் கொலைக்கான ஒத்திகைக்காக கொலை செய்வதற்கு முன்பு அங்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு இக்கொலை தொடர்பாக பிடிபட்டால் போலீஸாரின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று இருவரும் ஒத்திகை பார்த்துள்ளனர்.

அதோடு கொலை செய்வதற்கான வழிகளை கூகுள் மூலம் தேடி இருக்கின்றனர். இருவரும் மாறுவேடம் போட்டு இக்கொலையை செய்யவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தடயங்களை முற்றிலும் அழிப்பதற்காக குற்றத்திற்கு முன்னும் பின்னும் ஷியாவும் சேத்தனும் தங்களின் தொலைபேசி சாட்டிங் வரலாறு மற்றும் சர்ச் ஹிஸ்டரி முழுமையாக அழித்து இருந்தனர். அவ்வாறு நீக்கப்பட்ட சாட்டிங் பதிவுகளை மீட்டெடுக்க அவர்களின் மொபைல்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே மூன்று முறை முயற்சி செய்து நான்காவது முறையாக ஷியா தனது வருங்கால கணவனை கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் வி... மேலும் பார்க்க

ஆபரேஷன் தூஃபான்: தாய்லாந்திலிருந்து ஹைபிரிட் கஞ்சா கடத்தல்; சர்வதேச கும்பலை கைதுசெய்த கேரள போலீஸ்!

கேரள மாநிலத்தில் ஆபரேஷன் தூஃபான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக எர்ணாகுளம் மாவட்டம், மாறம்பிள்ளி குன்னுவழிப் பகுதியில் கடந்த புதன்கிழமை ம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டு... மேலும் பார்க்க

முஹர்ரம்: ``15,000 பேரைக் கொல்ல சதி செய்தேன்" - விஷ மாத்திரைகள் விநியோகித்தவர் பரபரப்பு வாக்குமூலம்

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ``மொஹர்ரம் ஊர்வலத்தைக்... மேலும் பார்க்க

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?

சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த ம... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட பெண் தாசில்தார்; வீட்டில் ரூ.5 கோடி, தங்கம், வைரம் பறிமுதல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தாசில்தாராகவும், இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகொம்மா சுசரிதா. இவர் சமீபத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ... மேலும் பார்க்க