செய்திகள் :

`அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

post image

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் செளதரி ஆகிய இருவரையும் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு இருவரும் எப்படி கொலை செய்தனர் என்பதை செய்து காட்டினர். ஷியாதான் இக்கொலைக்கு தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் ஷியாவிடம் விசாரணை நடத்தியதில் கேதன் அகர்வாலுடன் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானுக்கு தனது காதலன் சேதன் செளதரியுடன் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அதோடு சமூக ஊடகங்களில், கேதன் மற்றும் ஷியா ஆகியோர் வெளியிட்ட ரீல்கள், பதிவுகள் மற்றும் கதைகள் அவர்கள் ஜோடிகள் என்பதை வெளியுலகிற்கு காட்டியது. ஆனால் அந்த பாசத்திற்கு பின்னால் ஷியாவின் கொலை சதித்திட்டம் மறைந்து இருந்தது.

ஷியாவிடம் நடத்திய விசாரணையில், அவர் கேதன் அகர்வாலை திருமணம் செய்து கொள்ள விரும்பியதில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு கேதன் அகர்வாலை கொலை செய்துவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து சேதன் செளதிரியை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நம்பியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஷியா கோயல் ஷாப்பிங் என்ற பெயரில் கேதன் அகர்வாலிடம் இருந்து ரூ.1 கோடியை வாங்கியதாக தெரிகிறது. அதை அவர் நேரடியாக சேதனிடம் வழங்கியுள்ளார். அந்த பணத்தை தனது தொழில் மற்றும் வியாபாரத்திற்கு பயன்படுத்த சேதன் விரும்பினார்.

பணம் கையிக்கு கிடைத்தவுடன் 3 ஆண்டுகளில் தன்னால் பண ரீதியாக பெரிய அளவில் வளர முடியும் என்று சேதன் செளதிரி ஷியாவிடம் உத்தரவாதம் கொடுத்துள்ளார். கேதனை கொலை செய்த சில மாதங்கள் கழித்து ஷியாவின் பெற்றோரிடம் சென்று ஷியாவை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்க சேதன் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

கொலைக்கு 34 நிமிடத்திற்கு முன் காதலனுக்கு போன்!

ஷியா மற்றும் சேதனின் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது ஷியா தனது போனில் இருந்து கேதனை கொலை செய்வதற்கு 34 நிமிடத்திற்கு முன்பு ரகசியமாக போன் செய்து சேதனிடம் பேசி இருக்கிறார். இந்த உரையாடலில் புனே லோஹாகட் மலை கோட்டையில் கோட்டையில் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதையும், அருகில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து அதனை சேதனுக்கு தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது. கொலை செய்வதற்கான இடத்தை தேர்வு செய்ததும் அதற்கு சிறிது தூரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறி ஷியா தரையில் அமர்ந்து கொண்டார்.

அந்த நேரத்தில் கேதன் ஷியாவிடமிருந்து சிறிது தூரத்தில் இருந்தபோது அங்கு பின்புறமாக வந்து 400 அடி பள்ளத்தில் சேதன் தள்ளி விட்டுள்ளார். அதோடு அந்த இடத்தில் இருப்பதை சாதுர்யமாக ஷியா தவிர்த்துள்ளார். அருகில் இருந்தால் கேதன் அகர்வால், ஷியாவின் கையை பிடித்து தப்பிக்க முயற்சி செய்யக்கூடும் என்பதை தெரிந்து கொண்டு இவ்வாறு செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து ... மேலும் பார்க்க

`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் வி... மேலும் பார்க்க

ஆபரேஷன் தூஃபான்: தாய்லாந்திலிருந்து ஹைபிரிட் கஞ்சா கடத்தல்; சர்வதேச கும்பலை கைதுசெய்த கேரள போலீஸ்!

கேரள மாநிலத்தில் ஆபரேஷன் தூஃபான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக எர்ணாகுளம் மாவட்டம், மாறம்பிள்ளி குன்னுவழிப் பகுதியில் கடந்த புதன்கிழமை ம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டு... மேலும் பார்க்க

முஹர்ரம்: ``15,000 பேரைக் கொல்ல சதி செய்தேன்" - விஷ மாத்திரைகள் விநியோகித்தவர் பரபரப்பு வாக்குமூலம்

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ``மொஹர்ரம் ஊர்வலத்தைக்... மேலும் பார்க்க

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?

சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த ம... மேலும் பார்க்க