செய்திகள் :

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

post image

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின.

இதனைத்தொடர்ந்து அதிமுக-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்

சமீபத்தில் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்போது எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்திருக்கிறார்.

சபாநாயகர் ஜேசிடி பிராபகரும் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். சபாநாயகரிடம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. M.R. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்

அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகும், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்! இதற்கான '5' காரணங்கள் என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும்... மேலும் பார்க்க

`தொண்டை சரியில்ல' - ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

மாண்புமிகு இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு விழா!

காரைக்குடி வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Chamber of Commerce and Industries, Karaikudi) சார்பில், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வள துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு... மேலும் பார்க்க

'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் ம... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌ... மேலும் பார்க்க

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர் வரும் வியாழக்கிழமை தமிழக வ... மேலும் பார்க்க