செய்திகள் :

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' - முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

post image

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சிவசங்கர். இவரிடம் தனது மகனுக்கு வேலை வாங்கித் தருமாறு, ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அணுகியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

அப்போது, மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் உதவி பொறியாளர் பணி பெற்றுத் தருவதாகக் கூறி, தவணை முறையில் மொத்தம் 23 லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது. ஆனால், நீண்ட நாட்களாகியும் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த சீனிவாசன், சென்னை காவல் ஆணையரகத்தில் முறைப்படி புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த மோசடியில் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இந்த வழக்கில் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸார் முற்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிவசங்கருக்கு அதிகாரப்பூர்வமாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

ராணிப்பேட்டை: மலையில் துளைத்திருந்த ராணுவ வெடிகுண்டு - பாதுகாப்பான முறையில் அழித்த நிபுணர் குழு!

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த புங்கனூர் ஊராட்சி வெள்ளங்குளம் கிராமத்திலுள்ள வரதேசி மலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விறகுகளை சேகரிப்பதற்காக மலைப் பகுதியில் ஏறினார். அப்போது, ... மேலும் பார்க்க

'கரூருக்கு செல்ல முடிவெடுத்த முதல்வர் விஜய்?' - முழு விவரம் என்ன?

முதல்வர் விஜய் கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.Vijayகடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நாம... மேலும் பார்க்க

அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகும், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்! இதற்கான '5' காரணங்கள் என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும்... மேலும் பார்க்க

`தொண்டை சரியில்ல' - ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

மாண்புமிகு இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு விழா!

காரைக்குடி வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Chamber of Commerce and Industries, Karaikudi) சார்பில், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வள துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு... மேலும் பார்க்க

'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் ம... மேலும் பார்க்க