செய்திகள் :

Suriya 48: மீண்டும் 'ஜெய் பீம்' கூட்டணி; கயாடு லோஹர் - சாய் அபயங்கர்! - 'சூர்யா 48' அப்டேட்ஸ்

post image

சூர்யா நடித்திருந்த 'கருப்பு' திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அப்படத்திற்கு வசூல் ரீதியான நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 46-ஆவது படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Suriya 46 - Viswanath & Sons
Suriya 46 - Viswanath & Sons

மற்றொரு பக்கம் சூர்யாவின் 47-ஆவது படத்தை, 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். அதன் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது. நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

இப்படத்திற்குப் பிறகு 'ஜெய் பீம்' த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டன. தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

'கே.ஜி.எஃப்', 'காந்தாரா' போன்ற படங்களைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 'கருப்பு' படத்தைத் தொடர்ந்து சாய் அபயங்கர், சூர்யாவின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

கயாடு லோஹர் நாயகியாகக் கமிட் ஆகியிருக்கிறார். 'ஜெய் பீம்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடம் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யாவுடன் இணைவது பற்றி அறிவித்திருக்கும் ஹோம்பாலே நிறுவனம், "நிஜ மனிதர்களின் வாழ்க்கை பாரத்தைச் சுமந்த கதாபாத்திரங்கள். ஒவ்வொரு முறையும், வசதியான பாதையைத் தவிர்த்து, துணிச்சலான பாதையையே தேர்ந்தெடுத்த ஒரு கலைப்பயணம்.

திரையில் முப்பது ஆண்டுகால உண்மை. திரைக்கு வெளியே தொட்டுச் சென்ற கோடிக்கணக்கான இதயங்கள். தன் தலைமுறையின் மிகத் துணிச்சலான ஒரு நடிகன், தனது பிரம்மாண்டமான மேடையைச் சந்திக்கும் தருணம். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பெருமையுடன் சூர்யாவை வரவேற்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Con City Review: நூதன மோசடிகளைச் செய்யும் 'டார்க் காமெடி' குடும்பம்; மனதைக் கொள்ளையடிக்கிறதா படம்?

கர்நாடகாவின் முல்கியில் குடும்பமாக வாழும் சரவணன் (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்), ஜாக்கி (யோகி பாபு), ஜானகி (வடிவுக்கரசி) ஆகியோரின் அமைதியான வாழ்க்கையை மீண்டும் எட்டிப்பிடிக்கிறது அவர்களது கடந்த க... மேலும் பார்க்க

`நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?'- நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம் என்ன?

அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ' காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது' ... மேலும் பார்க்க

Resort: "தாத்தா பெயரை யூஸ் பண்ணினால் எனக்கு பிரஷர் வந்திடும்!" - கே.பாலசந்தர் பேரன் விஷ்ணு பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது 'ரெசார்ட்' சீரிஸ். அந்த சீரிஸில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் தன்யா மற்றும் விஷ்ணு பாலாவை நம் டெலி விகடன் சேனலுக்காகப் பேட்டி கண்டோம். மறைந்த இ... மேலும் பார்க்க

ரஜினி - விஜய் குறித்த பேச்சு: `நான் பின் வாங்கப்போவதில்லை' - விளக்கம் அளித்த விஷ்ணு விஷால்

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் ... மேலும் பார்க்க

வேலூர் கம்பன் கழகம் - ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழா!

வேலூர் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழாவினைச் சிறப்பாக நடத்தின. விழாவிற்கு வேலூர் கம்பன் கழகத்தின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் து... மேலும் பார்க்க

"அந்த இடம் சர்கஸ் கூடாரம் போல இருந்தது" - பாக்யராஜின் இறுதி அஞ்சலி குறித்து ராதிகா சரத்குமார்

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்யராஜ் நேற்று முன்தினம் (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜ் மறைந்த நாளிலேயே அவரது உடல் ... மேலும் பார்க்க