செய்திகள் :

Bombay Creamery: ஐஸ்க்ரீம் சந்தையில் கால் பதித்த ரிலையன்ஸ்… ₹10-ல் தொடங்கும் புதிய போட்டி

post image

இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தையில் களமிறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான Reliance Consumer Products Limited (RCPL), ‘Bombay Creamery’ என்ற புதிய ஐஸ்க்ரீம் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘தரமான ஐஸ்க்ரீம்… அனைவரும் வாங்கக்கூடிய விலையில்’ என்பதுதான் Bombay Creamery-யின் அடிப்படை அணுகுமுறை. உண்மையான பால் சார்ந்த பொருட்கள், குறிப்பாக real dairy cream பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘Global Quality at Affordable Price’ என்ற நிலைப்பாட்டுடன் இந்தப் பிராண்டை சந்தையில் கொண்டு வந்திருக்கிறது RCPL.

விலை விஷயத்திலும் ரிலையன்ஸ் கவனம் செலுத்தியுள்ளது. Bombay Creamery ஐஸ்க்ரீம்களின் விலை ₹10 முதல் தொடங்குகிறது. கோன், கப், டப், பார், ஸ்டிக் எனப் பல்வேறு வடிவங்களில் தயாரிப்புகள் அறிமுகமாகியுள்ளன. முதற்கட்டமாக மேற்கு இந்தியாவில் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Ice Cream
Ice Cream

குறைந்த விலை, உண்மையான டெய்ரி பொருட்கள் மற்றும் ரிலையன்ஸின் தேசிய அளவிலான விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை முன்வைத்து களமிறங்குகிறது Bombay Creamery. நிறுவனத்தின் தேசிய விநியோக வலையமைப்பு, சில்லறை விற்பனை அளவு மற்றும் நுகர்வோர் குறித்த சந்தைத் தகவல்கள் இந்தப் பிராண்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என RCPL தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் விரிவாக்கத்தில் இது அடுத்த முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் Jioவும், குளிர்பான சந்தையில் Campaவும் விரிவுபடுத்தியுள்ள நிலையில், தற்போது ஐஸ்க்ரீம் சந்தையிலும் தனது தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் களமிறங்கியுள்ளது.

RCPL இயக்குநர் T. Krishnakumar, “dairy shouldn't need shortcuts” என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் Bombay Creamery உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உண்மையான டெய்ரி கிரீமைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் உண்மையான ஐஸ்க்ரீமின் சுவையை வழங்குவதுடன், இந்தியக் குடும்பங்கள் வாங்கக்கூடிய விலையில் அதை வழங்குவதே நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே Amul, Vadilal, Mother Dairy, Kwality Wall’s, Arun உள்ளிட்ட நிறுவனங்கள் வலுவாக இருக்கும் ஐஸ்க்ரீம் சந்தையில், ரிலையன்ஸின் இந்தப் புதிய வரவு கவனத்தை ஈர்த்துள்ளது. ₹10 முதல் விலை, உண்மையான டெய்ரி கிரீம் மற்றும் வலுவான விநியோகக் கட்டமைப்புடன் களமிறங்கியுள்ள Bombay Creamery, நாடு முழுவதும் விரிவடையும்போது இந்திய ஐஸ்க்ரீம் சந்தையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

கடனால் அனைத்தையும் இழந்த பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்: மீண்டும் வேலைக்கு செல்லும் தொழிலதிபர்

நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் கடன் தொல்லையால் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையிக்கு செல்கிறது. ரிலையன்ஸ் மொபைல் உரிமையாளரான அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அது போன்று த... மேலும் பார்க்க

நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் விலையேற்றம்; கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25% உயர்வு!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுட... மேலும் பார்க்க

விளாச்சேரி டு அமெரிக்கா... களிமண்ணில் உருவாகும் ஒரு கிராமத்தின் கனவு!

பண்டிகை காலங்களில் வீடுகளையும் கொலு படிகளையும் அலங்கரிக்கும் பொம்மைகளுக்குப் பின்னால் பல குடும்பங்களின் உழைப்பு இருக்கிறது.அப்படிப்பட்ட பாரம்பர்ய பொம்மைத் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற ஊராகத் திகழ்கிறது ... மேலும் பார்க்க

Akshayakalpa: ஐ.டி வேலை டு ஆர்கானிக் ஃபார்மிங்; 6 முறை திவால்- இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம்!

கர்நாடகாவைச் சேர்ந்த சாப்ஃட்வேர் இன்ஜினீயரான சசிகுமார், அமெரிக்காவில் உள்ள விப்ரோவில் வசதியான ஐ.டி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்த சசிகுமார... மேலும் பார்க்க

`ISRO வேண்டாம்'- அன்று எடுத்த ரிஸ்க்; இன்று ₹1,000 கோடி சாம்ராஜ்யம்; ஆட்டம்பெர்க் நிறுவனத்தின் கதை!

ISRO-வில் கிடைத்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கும் முடிவை எடுத்த ஐ.ஐ.டி பாம்பே முன்னாள் மாணவர் மனோஜ் குமார் மீனா, இன்று ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்த... மேலும் பார்க்க

உடைந்த கண்ணாடிக்குஅ இவ்வளவு மதிப்பா? 100+ ஓவியங்கள்... பொள்ளாச்சி நண்பர்களின் வித்தியாசமான பிசினஸ்!

கண்ணாடி உடைஞ்சா அதைத் தூக்கிப் போடுவோம்... ஆனா, அதையே கலையாக மாற்றினால்? பொதுவாக உடைந்த கண்ணாடி என்றாலே அது தேவையில்லாத பொருளாகத்தான் பார்க்கப்படும். ஆனால், அந்த உடைந்த கண்ணாடியையே ஒரு கலைப்படைப்பாக ம... மேலும் பார்க்க