செய்திகள் :

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? - TRB ராஜா கேள்வி

post image

தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவு...

"தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது!

இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!

ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி (GST)

2025 ஆகஸ்டில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது.

அதாவது -1% சரிவு!

ஆனால் இதே காலகட்டத்தில்:

இந்தியா +9%

கர்நாடகா +13%

குஜராத் +15%

தெலங்கானா +16%

உத்தரப் பிரதேசம் +19%

மகாராஷ்டிரா +8%

தமிழ்நாடு மட்டும் -1%!

சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்?

ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது !

வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும்.

ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!

“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம்.

உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது,

தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை!

இந்த நிலை தொடர்ந்தால்:

பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?

மேலும் கடன் வாங்கப் போகிறார்களா?

வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?

அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா?

வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்!

இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது!

இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?

இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும்!"

திடீரென திறந்த அரசுப் பேருந்து கதவு; கீழே விழுந்து காயமடைந்த பள்ளி மாணவிகள் - பாய்ந்த நடவடிக்கை!

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

'அதிமுக-வுக்கே யூடர்ன்?' - கடுப்பில் தவெக நிர்வாகிகள்; குழப்பும் இசக்கி சுப்பையா!

`இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை மீண்டும் எம்.எல்.ஏவாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் தவெகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பை... மேலும் பார்க்க

தாய்லாந்தில் குவியும் 5000 அமெரிக்கப் படையினர்: பாலியல் தொழிலை குறிவைத்து ரெய்டு; என்ன நடக்கிறது?

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பட்டாயாவிற்கு இந்த வாரம் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினர் வருகை தர உள்ளனர். 200 நாட்களுக்கு மேலாக கடலில் கழித்த பின்னர், 'யுஎஸ்எஸ் ஆப... மேலும் பார்க்க

``கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்ச... மேலும் பார்க்க

`ராகுல் காந்தி தளபதியின் கைப்பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்' - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், 2029-ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் எனக் தவெக தரப்பிலிருந்து அழுத்தமாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் - தவெக என இருகட்சிகளுக்கிடையே கருத்து மோதலும... மேலும் பார்க்க

Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' - ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்... மேலும் பார்க்க