GuidanceTN விவகாரம்: 'மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதை வேடிக்கை பார்த்தது ஏன்?'...
Career: துபாய், அபுதாபியில் வேலைவாய்ப்பு; ரூ.2.86 லட்சம் வரை சம்பளம்! தமிழக அரசு அறிவிப்பு
ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
என்ன பணி?
எலக்ட்ரீஷியன் உதவியாளர், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னீஷியன், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரிக்கல் ஃபிட்டர், எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர், எலக்ட்ரிக்கல் ஃபோர்மேன், ஆபரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் இன்ஜினீயர், டெஸ்டிங் மற்றும் கமிஷனிங் இன்ஜினீயர்.
கல்வித் தகுதி: டிப்ளோமா, பி.இ., பி.டெக். (EEE), இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங்.
வயது வரம்பு: 22 - 40

சம்பளம்: குறைந்தது 6 மாத பணி அனுபவம் கொண்ட எலக்ட்ரீஷியன் உதவியாளர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.32,000 முதல் ரூ.36,000 வரையும்;
3 வருட பணி அனுபவம் கொண்ட எலக்ட்ரீஷியன் பணிக்கு ரூ.36,000 முதல் ரூ.52,000 வரையும்;
எலக்ட்ரிக்கல் ஃபிட்டர் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.52,000 வரையும்;
இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னீஷியன் பணிக்கு ரூ.65,000 முதல் ரூ.1,04,000 வரையும் ஊதியமாக வழங்கப்படும்.
கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் வழங்கப்படும்.
மேலும், 25 முதல் 45 வயதிற்குட்பட்ட 5 வருட பணி அனுபவம் கொண்ட எலக்ட்ரிக்கல் ஃபோர்மேன் பணிக்கு ரூ.65,000 முதல் ரூ.91,000 வரையும்;
எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணிக்கு ரூ.78,000 முதல் ரூ.1,43,000 வரையும்;
ஆபரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் இன்ஜினீயர் பணிக்கு ரூ.1,30,000 முதல் ரூ.2,60,000 வரையும்;
டெஸ்டிங் மற்றும் கமிஷனிங் இன்ஜினீயர் பணிக்கு ரூ.1,04,000 முதல் ரூ.2,86,000 வரையும் ஊதியமாக வழங்கப்படும்.
விசா, இருப்பிடம்..?
விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்குச் செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பப் படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை 5.12.2026 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (95662 39685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

















