செய்திகள் :

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

post image

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல உள்ளார்.

இந்தப் பேரணி குறித்து ராகுல் காந்தி நேற்று (அக்டோபர் 11) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது...

“இது நாம் விரும்பும் இந்தியா அல்ல.

கட்சி, பாலினம், சாதி, சமூகம் மற்றும் மாநில எல்லைகளைக் கடந்து, ஒட்டுமொத்த இந்தியர்களாக நாம் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வோம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஒவ்வொருவரும் நம்முடன் இணைந்து...

இளைஞர்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, இந்திய அரசியலமைப்பின் பக்கம் நிற்கும் ஒவ்வொருவரும் நம்முடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்வார்கள்.

வாக்குத் திருட்டைத் தடுக்க வேண்டும், SIR நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் சார்பில் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கவுள்ளோம்.

நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல் மற்றும் மோகன் பகவத் ஆகியோரால் இந்தியாவின் குரலை அடக்கிவிட முடியாது. இந்த பயந்தாங்கொள்ளிகளால் நம்மை அச்சுறுத்த முடியாது.

பயப்படாதீர்கள்

அவர்கள் வழிவிட்டு விலகியே தீர வேண்டும். அன்பு, சகோதரத்துவம் மற்றும் தேசபக்தியோடு நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுப்போம். பயப்படாதீர்கள்.

நாளை, ஒட்டுமொத்த இந்தியாவும் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் படையெடுக்கும்.” என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று #ChaloDilli என்கிற ஹேஷ்டேக்குடன், “ஜனநாயகத்தைக் காக்க அணிவகுப்போம். நீதிக்காக அணிவகுப்போம்” என்று பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

உக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' - ரூட்டை மாற்றும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

“ரஷ்ய அதிபர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு டீசல் கிடைக்க உள்ளது.”இது கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அமெரிக்... மேலும் பார்க்க

'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்

"தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என தமிழக காங்கிரஸ் தலை... மேலும் பார்க்க

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை ச... மேலும் பார்க்க

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்... மேலும் பார்க்க

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..? தமிழ... மேலும் பார்க்க