செய்திகள் :

Chiranjeevi: "சூர்யா, கல்விக்காக செய்பவை எனக்கு ஊக்கமளிக்கின்றன!" - புதிய முயற்சியில் சிரஞ்சீவி

post image

நடிகர் சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

அகரம் ஃப்வுண்டேஷன்
அகரம் ஃப்வுண்டேஷன்

இந்நிலையில் அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் புதிய முயற்சியைத் தொடங்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் செயல்களால் ஈர்க்கப்பட்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளார் என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பலரின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருகிறது. சூர்யா தனது சமூகப் பணிக்கு சிரஞ்சீவியை முன்மாதிரியாகக் கொண்டதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற உகாதி கொண்டாட்ட விழாவில் சிரஞ்சீவி, சூர்யா கல்விக்காக செய்யும் உதவிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, “சூர்யா, ஏழைகளின் கல்விக்காக செய்யும் விஷயங்கள் எனக்கு ஊக்கமளிக்கின்றன. அவரைப் போலவே சமூகப் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

Chiranjeevi
Chiranjeevi

பொருளாதார சிரமம் காரணமாக திறமையான குழந்தைகள் கல்வி வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம் எனவும் இந்த முயற்சி ஒரு பகுதிக்கு மட்டுமல்லாமல் செயல்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

விரிவான திட்ட அமைப்பு தயாராகி வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே அவருடைய அறக்கட்டளை மூலம் இரத்த வங்கி, கண் வங்கி உள்ளிட்ட பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.

Rashmika: 'நான் கடந்து வந்த பாதை நீண்டது..!' - மாநில விருதை பெற்ற ராஷ்மிகா நெகிழ்ச்சி

தெலங்கானா மாநில அரசின் 'Gaddar' திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது. இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார். ... மேலும் பார்க்க

"என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன், ஆனால் இன்று..!"- மாநில விருது வாங்கிய ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடன் நடிகர் தீக்சித் ஷ... மேலும் பார்க்க

Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" - மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படம் உருவாகியிர... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ரிசப்ஷன் க்ளிக்ஸ்! |Photo Album

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா சங்கீத் க்ளிக்ஸ்! |Photo Album மேலும் பார்க்க