செய்திகள் :

CWG 2026: "3 நாள் நான் சரியா சாப்பிடல; மாதவிடாய் வலியால்.!'- தங்கம் வென்ற மீராபாய் சானு எமோஷனல்

post image

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்த மீராபாய் சானுவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கம் வென்றது குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மீராபாய் சானு, " கடந்த மூன்று நாட்களாக நான் சரியாகச் சாப்பிடவில்லை.

இப்போது எனக்குத் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் போல் இருக்கிறது. நான் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டும் இருக்கிறேன்.

மீராபாய் சானு
மீராபாய் சானு

மகிழ்ச்சிக் கண்ணீர்

இந்தப் பதக்கம் எனக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. நான் காயங்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து எனது உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

தினமும் நான் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டி இருந்தது. நான் பதக்க மேடையில் நிற்கும்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அப்போது கடந்த சில ஆண்டுகளில் நான் கடந்து வந்த எல்லாமே என் நினைவுக்கு வந்தது. அவை மகிழ்ச்சிக் கண்ணீர். என்னால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதிதான்!

இந்தப் பதக்கத்திற்காக நான் மிகக் கடுமையாக உழைத்திருந்தேன். பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு நான் பல துன்பங்களைச் சந்தித்தேன். அங்குப் பதக்கத்தை இழந்து நான்காவது இடத்தைப் பிடித்தேன்.

இடுப்புக் காயத்தாலும், போட்டி நடந்த நாளில் மாதவிடாய் வலியாலும் அவதிப்பட்டேன். அது எவ்வளவு கடினமானது என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்வார்கள்.

ஆனால் விளையாட்டு வீரர்களாக, நாங்கள் களத்தில் இறங்கி இந்தியாவிற்காகப் போட்டியிட வேண்டும். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதிதான்.

மீராபாய் சானு
மீராபாய் சானு

கடினமான தருணங்கள் வரும், ஆனால்.!

ஒவ்வொரு போட்டியும் உங்களுக்கு ஏதேனும் ஒன்றைக்கற்பிக்கிறது. என்ன தவறு நடந்தது, எதை மேம்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். அப்படித்தான் நீங்கள் மீண்டும் பலமாகத் திரும்பி வர முடியும்.

கடினமான தருணங்கள் வரும். சில நேரங்களில் நீங்கள் பதக்கங்களை வெல்வீர்கள், சில நேரங்களில் வெல்ல மாட்டீர்கள். நீங்கள் வென்றாலும் அடுத்த இலக்கில் கவனமாக இருங்கள். தோற்றால் அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற உழையுங்கள்.

அதைத்தான் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் செய்ய வேண்டும். தொடர்ந்து கடுமையாக உழைத்து, உங்களை நம்புங்கள், எப்போதும் இந்தியாவைப் பெருமைப்படுத்த முயலுங்கள்.

அடுத்து என் கவனம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மீதுதான் உள்ளது. அதுதான் எனது அடுத்த இலக்கு. அதற்குப் பிறகுதான் அடுத்தகட்டப் பயணத்தைப் பற்றி முடிவு செய்வேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

காமன்வெல்த் மேடையில் முத்திரை பதித்த தமிழன்; காயம் `டு' கம்பேக்... சாதித்த ராஜா முத்துப்பாண்டி!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவு... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி; ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி. நேற்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பளுதூக்கு... மேலும் பார்க்க

Commonwealth: தொடர்ந்து 3 முறை தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சாதனை - இந்தியாவுக்கு முதல் தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது தங்... மேலும் பார்க்க

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வென்று சாதனை படைத்த அனஹத் சிங்! - யார் இவர்?

கனடாவின் நயாகரா ஆன் தி லேக் நகரில் சனிக்கிழமையன்று 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்,எகிப்து வீராங்கனையான ருகையா சேலமை 3-0 என்ற கணக்கில் வீழ... மேலும் பார்க்க

கஷ்டங்களை எட்டி உதைத்த கால்பந்து நாயகர்கள்! - வறுமையையும் தடைகளையும் வென்ற 5 வீரர்களின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! - போட்டிக்கு பின் ஆவேச சண்டை!

கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அர்ஜெண்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களுக்கும் இடையே ந... மேலும் பார்க்க