செய்திகள் :

Delimitation: 'ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கே வரும் சோனியா காந்தி?' - முழுவிவரம் என்ன?

post image

பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கும் நிலையில், ஸ்டாலினின் முடிவை மாற்ற சோனியா காந்தி உட்பட காங்கிரஸின் முக்கிய தலைவர்களே சென்னைக்கு நேரில் வரவிருப்பதாக தகவல்.

ஸ்டாலின் - சோனியா காந்தி

எல்லா மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்த்தப்படும் என தொகுதி மறுவரையறை மசோதாவில் கூறப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக நேற்று அறிவித்தது. நேற்று இரவே திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் ஒரு குழுவினர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்திருந்தனர்.

மக்களவையில் திமுகவுக்கு 22 எம்.பிக்களும் மாநிலங்களவையில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. பாஜக மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற திமுகவின் ஆதரவு கட்டாயம் தேவைப்பட்டது. இந்நிலையில்தான் பின்னணியில் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் திமுக மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. இந்த முடிவு காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுகவின் ஆதரவோடு பாஜகவால் எளிதில் மசோதாவை நிறைவேற்ற முடியும் என்பதால், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கடும் அப்செட். இந்நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலினை காங்கிரஸின் மூத்தத் தலைவர்கள் அடங்கிய குழு சென்னையில் அவரது வீட்டிலேயே நேரில் சந்திக்கவிருக்கிறது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, டி.கே.சிவக்குமார், வி.டி.சதீசன் உட்பட 10 க்கும் மேற்பட்ட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல். இன்று மதியம் 1 மணிக்கு மேல் நடக்கப்போகும் இந்த சந்திப்பில், மசோதாவுக்கு எதிராக திமுக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டுமென சோனியா காந்தியே ஸ்டாலினிடம் கேட்கவிருக்கிறார். இதனால் இந்த சந்திப்பு அகில இந்திய அளவில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் மூத்தத் தலைவர்கள் அத்தனை பேரும் ஸ்டாலினை தேடி வரவிருப்பது ஆளும் தவெக அரசுக்கும் பிரஷரை ஏற்றியிருக்கிறது.

திருவள்ளூர்: 18 ஏக்கர் பலபயிர் சாகுபடி; பீனா நிர்மலின் (V2M) இயற்கைப் பண்ணை | Photo Album

செங்கல்பட்டு: ரசாயன நச்சுத்தன்மை இல்லாத 100 வகை காய், கனி, கீரை... | Photo Album மேலும் பார்க்க

Delimitation: 'திமுகவின் ஆகஸ்ட் மாத நிலைப்பாடு இது' - திமுக ஆதரித்த தீர்மானத்தைப் பகிர்ந்த சிதம்பரம்

அனைத்து மாநிலங்களுக்குமே 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் 50 சதவீத தொகுதி உயர்வு...அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை இல்லை என்கிற நிலைப்பாட்டைத் தற்போது எடுத்துள்ளது... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரசாயன நச்சுத்தன்மை இல்லாத 100 வகை காய், கனி, கீரை... | Photo Album

"ஈஸினு நினைச்சு தொடங்கினேன்; ஆனா, கிரிக்கெட்டை விட கஷ்டம்.!" - விவசாயம் குறித்து தோனி மேலும் பார்க்க

Delimitation: 'திமுகவை அம்பலப்படுத்துங்க' - உத்தரவிட்ட முதல்வர்; களத்தில் இறங்கும் தவெக அமைச்சர்கள்?

மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தவெக சார்பில் 'சாதனை வெற்றி விளக்கக் கூட்டம்' என்ற பெயரில் ஒரு கூட்டம் அவசர அவசரமாகத் திடீரென ஏற்... மேலும் பார்க்க

புகையிலை வணிகத்தில் ரூ.88 கோடி ஜிஎஸ்டி மோசடி; ரூ.150 கோடி போலி சிகரெட்டுகள் பறிமுதல்

புகையிலை வணிகத்தில் ரூ.88 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி மோசடி என்றும், இதையொட்டி ரூ.150 கோடி மதிப்புள்ள போலி சிகரெட்டுகள் முடக்கம் என்றும் நேற்று (நவம்பர் 28) அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.அறி... மேலும் பார்க்க

Delimitation: "திமுக கேட்டது மசோதாவில் இடம்பெற்றுவிட்டது" - அமித் ஷாவைச் சந்தித்த கனிமொழி

மத்தியில் பாஜக அரசு நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது.இந்த மசோதாவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது திமுக.அமித் ஷாவைச் சந்தித்த கனிமொழிதொகுதி மறு... மேலும் பார்க்க