திருவள்ளூர்: 18 ஏக்கர் பலபயிர் சாகுபடி; பீனா நிர்மலின் (V2M) இயற்கைப் பண்ணை | Ph...
Delimitation: 'திமுகவின் ஆகஸ்ட் மாத நிலைப்பாடு இது' - திமுக ஆதரித்த தீர்மானத்தைப் பகிர்ந்த சிதம்பரம்
அனைத்து மாநிலங்களுக்குமே 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் 50 சதவீத தொகுதி உயர்வு...
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை இல்லை என்கிற நிலைப்பாட்டைத் தற்போது எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
இதற்கு ‘நாங்கள் கேட்டதெல்லாம் புதிதாக மாற்றப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில் இடம்பெற்றுவிட்டது’ என்று திமுக தங்களுடைய ஆதரவைத் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு வழங்கியுள்ளது.
Tamil Nadu Assembly adopted a Resolution on 12-8-2026. DMK voted in favour of the Resolution
— P. Chidambaram (@PChidambaram_IN) November 29, 2026
No. Demand
1 Permanently retain the Lok Sabha's existing strength of 543 elected seats.
2 Permanently protect the existing State-wise distribution of Lok Sabha…
ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தொகுதி மறுவரையறையில் திமுக எடுத்த நிலைப்பாடு வேறு என்பதைக் குறிப்பது போல,
ஆகஸ்ட் மாதம் திமுக ஒத்துக்கொண்ட தீர்மானங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்...
“12-8-2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக திமுக வாக்களித்தது.
1. மக்களவையில் தற்போதுள்ள 543 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை நிரந்தரமாக அப்படியே தக்கவைக்க வேண்டும்.
2. மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் மாறாத வகையில், மக்களவைத் தொகுதிகளின் தற்போதைய மாநிலவாரியான பங்கீட்டை நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும்.
3. மக்களவை - மாநிலங்களவை இடையிலான எண்ணிக்கை விகிதத்தை ஏறத்தாழ 2.2:1 என்ற அளவில் பராமரிக்க வேண்டும்.
4. தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்காமல், தற்போதுள்ள 543 இடங்களைக் கொண்டே 2029 பொதுத் தேர்தல் முதல் மக்களவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
5. மாநிலச் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.”














