செய்திகள் :

Delivery Boy: "என் மகன் என்பதாலேயே நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை" - லியோனி கூறியதென்ன?

post image

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டெலிவரி பாய்’.

இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக இன்று வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லியோனி, " ‘டெலிவரி பாய்’ படம் ஒரு கூட்டு முயற்சியில் உருவானப் படம். என் மகனுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். காரணம் பலருடைய உழைப்பு இணைந்திருக்கிறது.

டெலிவரி பாய்
டெலிவரி பாய்

லியோனி மகனா நீ? உனக்கு எதற்கு சினிமா எல்லாம் என்று கேட்பார்கள். இதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் லியோனி மகன் என்பதாலேயே கிடைக்காமல் போயிருக்கிறது. லியோனி மகன் என்று பாராமல் சிவக்குமார் என்றவரின் திறமையைப் பாருங்கள்.

என் மகனுக்கு இனி நல்ல கதைகள் அமைந்து சினிமா துறையில் ஜெயிக்க வேண்டும். சினிமா அதனை நம்பியவர்களை கைவிட்டதாக சரித்திரமே இல்லை. சினிமாவிற்காக உழைப்பவர்கள் நிச்சயம் வென்றுவிடுவார்கள். என் மகன் நிச்சயம் இந்தத் துறையில் வென்றுவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"கண்டேன் காதல் பட ஷூட்டிங்கின் போது 'கோ' படத்தை மிஸ் பண்ணிட்டேன்!" - நடிகர் பரத்

அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் பரத். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ``டிசம்பர் 14, 2004. இந்தத் தேதியை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. `காதல்’ படம் அந்த தினத்தில்தான் வெளிய... மேலும் பார்க்க

மகாராஜா: "என்னால் முடியாது" - சச்சனாவின் நடிப்பை வியந்து பாராட்டிய டாம் ஹாங்க்ஸ்!

“அந்தப் பொண்ணை என்னால் மறக்கவே முடியாது!” – மகாராஜாவைப் பார்த்து வியந்த டாம் ஹாங்க்ஸ்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகத்தில் (LACMA) நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

Maharaja: "அந்தப் பெண்ணின் நடிப்பிலிருந்து மீள முடியவில்லை" - சாச்சனாவைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் நடித்த இளம் நடிகை சாச்சனாவைப் பாராட்டியிருக்கிறார். 'குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்த... மேலும் பார்க்க

Vijay Sethupathi: "இது திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ்" - எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி

தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் விருது வழங்கும் பிரசண்டராகப் பங்கேற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.இ... மேலும் பார்க்க

பொன்னியின் செல்வன் : வரலாறும் புனைவும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 44

வந்தியத்தேவனுக்கும், அவனது குதிரை செம்பாவுக்கும் இடையிலான உறவு அழகானது. கடம்பூர் மாளிகைக்குள் நுழையவிடாமல் வந்தியன் தடுக்கப்படும்போது, செம்பாவின் உதவியால் அதை மீறுகிறான். போலவே அருள்மொழிக்கு யானைகளோடு... மேலும் பார்க்க