செய்திகள் :

Dhruv Vikram: "நாம் உண்மையோடு இருந்தால்..." - சமூக வலைத்தள விமர்சனங்கள் குறித்து துருவ் விக்ரம்

post image

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் துருவ் விக்ரம் பேசியிருக்கிறார். 'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்பை இன்று தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் துருவ் விக்ரம், கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளித்தார்.

Dhruv Vikram
Dhruv Vikram

தொகுப்பாளர் அவரிடம், "உங்கள் திரைப்பயணத்தில், உங்களைப் போன்ற ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சொந்த விஷயங்களிலும் காட்டப்படும் தீவிரமான கவனம் மற்றும் விமர்சனங்களுக்குப் பழகிக்கொள்ள முடியுமா? இது உங்களை மனரீதியாகப் பாதிப்பதுண்டா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் தந்த துருவ் விக்ரம், "இத்துறையை நாம் தேர்வு செய்யும்போதே, இத்தகைய விமர்சனங்களும் தீவிரமான கண்காணிப்புகளும் இதன் ஒரு அங்கமாகவே இருக்கும் என்பதை மிக ஆரம்பத்திலேயே நாம் புரிந்துகொள்கிறோம்.

இத்தொழில் எவ்வளவு அழகானது என்றாலும், இதில் பல பரிமாணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமெனில், இவை என்னை ஒருபோதும் பாதித்ததே இல்லை என்று கூறிவிட முடியாது.

Bison - Dhruv Vikram
Bison - Dhruv Vikram

நாம் யார், நமக்கான விஷயங்கள் என்ன என்பதில் தெளிவு வேண்டும். நமக்கு எது முக்கியமானது, நாம் நேசிக்கும் மனிதர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் உண்மையோடு இருக்கும்போதும், நம் எல்லை என்னவென்று நமக்குத் தெரியும்போதும், இந்த விமர்சனங்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

அந்த வகையில், கடந்த 7 - 8 ஆண்டுகால என் திரைப்பயணத்தில், எனக்கு எப்போதும் துணையாக நின்று ஊக்கமளிக்கும் ஒரு சிறிய நல்ல நட்பு மற்றும் ஆதரவாளர் வட்டம் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன்," எனத் தெரிவித்திருக்கிறார்.

"இப்ப அவர் இருந்திருந்தா..." - பாரதிராஜாவின் நினைவிடத்தில் FL Poster வெளியிட்ட குறும்பட இயக்குநர்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் 'கருத்தப்பாண்டியின் மொய்ப் பணம்' என்ற குறும்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவரது இயக்கத்தில் பணிபுரிந்த சிலர் ஒன்றிணைந்து இந்தக் குறும்ப... மேலும் பார்க்க

ஹீரோ டு கேமரா ஆல் இன் ஆல் ஒரே ஆள்! 'ஒன் மேன்' விளம்பரத்துக்காகவா?- சங்ககிரி ராஜ்குமாரின் பதில் என்ன?

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, வில்லன், துணை நடிகர்கள், ஒளிப்பதிவாளர், வசனம் எனச் சினிமாவின் அத்தனை கிராஃப்டுகளையும் ஒரே ஆள் பண்ணி வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் 'ஒன் மேன்'.தனி ஒரு ஆளாக இ... மேலும் பார்க்க

`இப்போவரைக்கு தீபாவளி ரிலீஸ் படங்கள் உறுதி செய்யபடாததற்கு காரணம்.!' - நிலவரம் சொல்லும் தனஞ்செயன்

இந்தாண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகக்கூடிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யா படம் வெளியான அதே தேதியில் விஷால் படம் வெளியாகிறது. அடுத்து 'சர்தார்2', 'மண்ட... மேலும் பார்க்க

DC: "ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான் தூணாக நிற்கின்றனர்" - 'டிசி' படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் பாராட்டு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’. கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் வாமிகா கேபி நாயகிய... மேலும் பார்க்க

"நான் 'கொடுக்காப்புளி'னு யாருக்கும் தெரியல; அந்த குழந்தை நட்சத்திரமும் நான்தான்!" - நடிகர் வசந்த்

'வதந்தி' சீரிஸின் முதல் சீசனுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த சீரிஸில் பிரபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் வசந்த். நடிகர் வச... மேலும் பார்க்க

DC: `வேற லெவல் ஸ்டைலா இருக்கு' - படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'டிசி'. நடிகை வாமிகா கபி, நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக... மேலும் பார்க்க