செய்திகள் :

Dileep: "என் தரப்பு உண்மையை எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்..." - திலீப் ஓபன் டாக்

post image

மலையாள நடிகர் திலீப், கத்தாரில் நடைபெற்ற 'திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Dileep's Neekam Film
Dileep's Neekam Film

கடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "எனக்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்திற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.

கடந்த 10 வருடங்களாக என் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், என் தரப்பு உண்மையை என் வழியில் எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்தான் நான் தள்ளப்பட்டிருந்தேன். தாயார்கள், சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் சிறு குழந்தைகள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

அந்தப் பிரார்த்தனைகளின் பலனால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். அந்த மாபெரும் சுனாமியில் நான் சிக்கித் தவித்தபோது என்னை விழாமல் தாங்கிப் பிடித்தவர்கள் நீங்கள்தான்.

நான் உறுதியாக நிற்க உங்கள் பிரார்த்தனைகளே உதவியது. உங்கள் ஒவ்வொருவரின் கைகளையும் பிடித்து நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல விரும்புகிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஜெகன் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், திலீப் நடிப்பில் 'நீக்கம்' படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெத்லகேம் குடும்ப யூனிட்: ``ரூ300 கோடி வசூல்... அதில் பாதிகூட எங்களுக்கு கிடைக்காது" - பஹத் பாசில்

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான `பெத்லகேம் குடும்ப யூனிட்' படம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பஹத் பாசில், ... மேலும் பார்க்க

பெத்லகேம் குடும்ப யூனிட்: "புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்.!"- பகத் பாசில்

'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியானப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'.நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிய... மேலும் பார்க்க

உண்ணாவிரதம் இருந்து தொல்லை கொடுத்த சினிமா இயக்குநர்; வழக்கு தொடர்ந்த நடிகை மஞ்சு வாரியர்!

திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய 'கயற்றம்' சினிமாவில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, தன்னை சனல்குமார் பின்தொடர்ந்து தொல்லை செய்வதாக... மேலும் பார்க்க

"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என... மேலும் பார்க்க

Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி

'கும்பளங்கி நைட்ஸ்', 'பீஷ்ம பர்வம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்... மேலும் பார்க்க

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்ப... மேலும் பார்க்க