செய்திகள் :

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

post image

Doctor Vikatan: எனக்கு அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில்  உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய்  இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தக் கருமை நிறப் படலம் மாறுமா?

பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.   

மருத்துவர் கே. பாஸ்கர்

நீங்கள் சொல்லும் இந்ப் பிரச்னையை ஆங்கிலத்தில்  'அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ்' (Acanthosis Nigricans) என்றும்,  தமிழில்  'கறுப்பு வெல்வெட் திட்டு' என்றும் சொல்கிறோம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, இதுபோன்ற கறுப்பு நிறத் திட்டு உள்ளவர்களோடு இந்த பாதிப்பு இல்லாதவர்களை ஒப்பிடும்போது சர்க்கரை நோய் இருமடங்காக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
2024-ல் வெளிவந்த இந்திய மருத்துவச் சங்கத்தின் ஓர் ஆய்விதழ் கட்டுரைப்படி, தென்னிந்தியாவில் இத்தகைய கறுப்பு வெல்வெட் திட்டுகள் பெண்களிடையே 20 சதவிகிதமும், ஆண்களிடையே 16 சதவிகிதமும் உள்ளதாகத் தெரிகிறது. இது உச்சபட்சமாக 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. மேலும், 60 வயதுக்குப் பிறகு இது குறைந்துவிடுகிறது.

இதுபோன்ற கறுப்பு நிறத் திட்டு உள்ளவர்களோடு இந்த பாதிப்பு இல்லாதவர்களை ஒப்பிடும் போது சர்க்கரை நோய் இருமடங்காக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த பாதிப்பு ஒரு தொற்றுநோயோ அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடியதோ அல்ல. உடலின் ஏதோ ஒரு மருத்துவப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம். உடல் பருமன், நீரிழிவு நோய், பெண்களில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) போன்ற பிரச்னைகளுடன் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. கருத்தடை மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் இது வரலாம்.
அரிதாக, மரபணு காரணமாக சில குடும்பங்களில் எல்லோரையும் இது பாதிக்கலாம். மேலும், சிலருக்கு குறிப்பாக அடர்ந்த கறுப்பு நிற சருமம் கொண்டவர்களுக்கு முழங்கைகள், முழங்கால்கள், கன்னங்கள், நெற்றி போன்ற இடங்களில்கூட கறுப்புத் திட்டுகள் ஏற்படலாம்.
மிகவும் அரிதாக, இரைப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாகவும் இது இருக்கலாம்.

இது உடலின் மடிப்புகள் அல்லது சருமத்தில் உராய்வு ஏற்படும் பகுதிகளில்,  அதாவது அக்குள், இடுப்புப்பகுதி,   கழுத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில்  ஏற்படுவதால், ஈரப்பதத்தால் மென்மையடைந்து துர்நாற்றம் வீசக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
சிலருக்கு இது தோற்றத்தை  பாதிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். மேலும், இதனுடன் தொடர்புடைய  நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கான சிக்கல்கள் ஏற்படலாம்.

உடல் பருமன் இல்லாதவர்களுக்கோ, சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கோ இது உடலில் திடீரென்று ஏற்பட்டால், இது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்குமோ என்று மருத்துவர் பரிசீலிப்பார். அரிப்பு நோய் (eczema) உள்ளவர்கள் அடிக்கடி சொரிந்து கொள்வதால், சருமம் கறுப்பு நிறமாக மாறக்கூடும். அதுவும் அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸும் வேறு வேறு.

உடல் பருமன் இருந்தால் அந்த எடையை உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகளில் குறைக்கச் சொல்வார்.

அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ் கறுப்பு வெல்வெட் திட்டுகளை மருத்துவர் பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விடுவார்.
உங்கள் உயரம், எடை ஆகியவற்றைக் கணக்கெடுத்து, உடல் பருமன் இருந்தால் அந்த எடையை உடற்பயிற்சி மற்றும்  உணவுக்கட்டுப்பாட்டு முறைகளில் குறைக்கச் சொல்வார். அதுவே இதற்கான சிகிச்சை.
உங்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து நீரிழிவு, தைராய்டு உள்ளனவா என்று பரிசோதிப்பார். அடிப்படை உடல்நலப் பரிசோதனைகளான கொழுப்பு அளவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயல்பாடுகளை சோதிக்கும் ரத்தப் பரிசோதனைகளும் இதில் அடங்கும். குறிப்பிட்ட சில பேருக்கு ஹார்மோன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

உங்கள் குடும்ப மருத்துவருக்கு நோய் கண்டுபிடிப்பதில் குழப்பம் இருந்தால் அல்லது புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று சந்தேகித்தால், சருமநோய் மருத்துவரின் ஆலோசனைக்குப் பரிந்துரைப்பார். அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸுடன் தொடர்புடைய நோய்களுக்குத் தான் மருத்துவம் செய்ய வேண்டும். மற்றபடி அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸுக்கு மருத்துவம் தேவையில்லை.
ஆனால், இது அழகு சார்ந்த பிரச்னையை ஏற்படுத்துவதால், சரும நோய் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்பூச்சுக்கான களிம்புகளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

ஈரோடு: ஒரே நாளில் 153 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை!

‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.தாய்ப்பால் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan:பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா.... இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக... மேலும் பார்க்க

Doctor Vikatan: பால் மற்றும் பால் பொருள்களில் லாக்டோஸ் அலர்ஜி... அறிகுறிகளை உணர முடியுமா?

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன். எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 65. கடந்த பத்து வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. நான் தினமும் 15 நிமிடங்கள் வாக்கிங் போவேன். இது போதுமா... எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகமாக வாக்கிங் செய்ய வேண்டும்? ... மேலும் பார்க்க

தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து... உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்துக!கருப்பொருள் 2026: நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால்தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் கடமையோ அல்லது ஒரு வேலையோ அல்ல... அது தாய்க்கும் சேய்க்கும் இடையே நிகழும் ஓர் உணர... மேலும் பார்க்க