செய்திகள் :

Doctor Vikatan: டிரெண்டாகும் Tai Chi வாக்கிங்... அப்படி என்ன ஸ்பெஷல்?

post image

Doctor Vikatan: சமீபகாலமாக தாய்ச்சி வாக்கிங் என்ற பெயரில் ஒன்று டிரெண்ட் ஆகிறதே... அது என்ன... எல்லோரும் செய்யலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

தாய்ச்சி (Tai Chi) என்பது சீனர்களின் மிக மெதுவான அசைவுகளைக் கொண்ட ஒரு பயிற்சி முறையாகும். நீங்கள் சீனா சென்றால், பூங்காக்களில்  முதியவர்கள் குழுவாக இணைந்து மிக மெதுவாக உடற்பயிற்சிகளைச் செய்வதைப் பார்க்கலாம். முதியவர்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி மற்றும் தடுமாற்றங்களை 50% வரை குறைக்க தாய்ச்சி பயிற்சி உதவுகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டுகிறது.

தாய்ச்சி நடைப் பயிற்சியின் முக்கிய நோக்கமே மிக மெதுவாகவும், கவனத்துடனும் (conscious walking) நடப்பதுதான். முதலில் குதிகாலை (heel) மெதுவாகக் கீழே வைத்து, பின்னர் கால் விரல்களை (toes) மெதுவாக வைக்க வேண்டும். இதில் பல்வேறு வகையான நடை அசைவுகள் உள்ளன. இப்படி மெதுவாகச் செய்வதால் உங்களுக்கு உடலின் மீது நல்ல கட்டுப்பாடு (control),  வலிமை (strength) மற்றும் சமநிலை (balance) கிடைக்கும்.  இது உடற்பயிற்சி செய்வதற்கான பல வழிகளில் ஒரு வழிதானே தவிர, இதை மட்டுமே செய்தால் தான் நல்லது என்பதில்லை.

உதாரணத்திற்கு, ஓட்டப்பயிற்சியில் (Running) நீண்ட தூர ஓட்டம் (Long Distance), விரைவோட்டம் (Sprinting), இடைவெளி ஓட்டம் (Interval running) எனப் பல முறைகள் இருப்பது போல, நடையிலும் 'டெம்போ வாக்கிங்', 'லாங் டிஸ்டன்ஸ் வாக்கிங்' வரிசையில்   தாய்ச்சி   நடையும் ஒன்றாகும்.

ஓட்டப்பயிற்சியில் (Running) நீண்ட தூர ஓட்டம் (Long Distance), விரைவோட்டம் (Sprinting), இடைவெளி ஓட்டம் (Interval running) எனப் பல முறைகள் இருப்பது போல, நடையிலும் 'டெம்போ வாக்கிங்', 'லாங் டிஸ்டன்ஸ் வாக்கிங்' வரிசையில் தாய்ச்சி நடையும் ஒன்றாகும்.

இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்க விரும்புவது நல்ல விஷயம். ஆனால், இது மிகவும் மெதுவாக இருக்கும்.  இதற்கென பயிற்சி அளிக்கும் நபர்களிடம் முறையாகக் கற்றுக்கொண்டு செய்தால், எதற்காகச் செய்கிறோம், எதில் கவனம் செலுத்துகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து செய்ய முடியும்.

ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வது நல்ல விஷயம் தான். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆனால்,   தாய்ச்சி வாக்கிங் என்பது மிக மெதுவாக இருக்கும் என்பதால் இதற்கு அதிக பொறுமை (patience) தேவைப்படும்.  அமைதியான சூழலில், கவனத்தை உங்கள் பாத அசைவுகளிலும் மூச்சிலும் மட்டுமே வைத்துப் பயிற்சி செய்வதன் மூலம் சிறந்த மன அமைதியைப் பெற முடியும்.

ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்:
சென்னை, ஆழ்வார்பேட்டையில் Creed strength and conditioning studio நடத்துகிறார். 14 ஆண்டுகளாக ஃபிட்னெஸ் கோச்சாக இருப்பவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: உடற்பயிற்சியின்போது வெளியேறாத வியர்வை...கொழுப்பு குறையாது என அர்த்தமா?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக ஜிம் சென்று உடற்பயிற்சிகள் செய்கிறேன். மற்ற எல்லோருக்கும் உடைகள் நனையும் அளவுக்கு வியர்க்கிறது. ஆனால், எனக்கு மட்டும் வியர்ப்பதே இல்லை. உடலில் இருந்து வியர்வை வெ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு: குணமான பிறகும் தொடரும் உடல் சோர்வு... சரியாகுமா, இப்படியேதான் தொடருமா?!

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் டெங்கு பாதித்தது. ஒரு மாதம் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தேன். ஆனாலும் எனக்கு உடல்சோர்வு குறையவே இல்லை. இது இப்படியேதான் தொடருமா... டெங்குவின் தீவிரம் குறைந்துவிட்... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு பாதிப்பு: எந்தெந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டுத்தரும்?

Doctor Vikatan: டெங்கு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை... தட்டணுக்களை (Platelets) விரைவாக அதிகரிக்க உதவும் உணவுகள் உண்மையில் இருக்கின்றனவா... பழங்கள் சாப்பிடலாம... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்... மீண்டு வரும் நிலையிலும் பிரச்னைகள் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து மீள்வதே பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், சிலர், நோயிலிருந்து குணமான பிறகும் அதன் பின் விளைவுகளில் இருந்து முழுமையாக மீ... மேலும் பார்க்க

``பாக்கெட் உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை” -FSSAI முடிவு; ஏன் தெரியுமா?

கடையில் பாக்கெட் உணவு வாங்கும்போது, அதில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு உள்ளிட்ட சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பாக்கெட்டின் பின்பக்கத்தில் இருக்கும் Nutrition தகவல்களைத் தேடிப் பார... மேலும் பார்க்க

சிருங்கேரி சாரதா மருத்துவமனை 3ஆம் ஆண்டு விழா - 65% பேருக்கு இலவசக் காப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை!

சென்னை கெளரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா மருத்துவமனை உயர்தர புற்றுநோய் சிகிச்சையை சிறந்த முறையில் இலாபநோக்கமின்றி வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் மூன்றாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (1... மேலும் பார்க்க