செய்திகள் :

Doctor Vikatan: பால் மற்றும் பால் பொருள்களில் லாக்டோஸ் அலர்ஜி... அறிகுறிகளை உணர முடியுமா?

post image

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக  எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன்.

எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்களைத் தவிர்க்கச் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தப் பிரச்னை எப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்
கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு 'லாக்டோஸ் இன்டாலெரன்ஸ்' (Lactose Intolerance) என்று பெயர். அது சில அறிகுறிகளைக் காட்டும். பால் பொருள்கள் உட்கொண்ட 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்திற்குள் பின்வரும் பிரச்னைகள் தோன்றும்.

வயிற்று உப்புசம் (Bloating), வாயுத் தொல்லை (Flatulence), கடுமையான வயிற்றுவலி மற்றும் தசைப்பிடிப்பு (Cramps) போன்ற அறிகுறிகள் உடனே தெரியவரும். முகத்தில் பருக்கள் (Acne) வருவது, அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றி எடை அதிகரிப்பது போன்றவை பிறகு தெரியவரலாம்.

பால் பொருள்களைத் தவிர்த்தல்தான் இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வாக அறிவுறுத்தப்படும். பாலை உணவிலிருந்து 2 முதல் 3 வாரங்களுக்கு முழுமையாகத் தவிர்க்கும்போது (Complete milk removal), நோயாளிகள் நல்ல முன்னேற்றத்தை உணர்வார்கள்.

லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய 'லாக்டோஸ் இன்டாலெரன்ஸ் டெஸ்ட்' (Lactose Intolerance Test) என்ற மரபணுப் பரிசோதனையைச் செய்து கொள்ளலாம். 

பிரச்னை உள்ளவர்கள், பசும்பால், எருமைப்பால், பாலாடைக்கட்டி (Cheese), வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் பவுடர் கொண்ட தயாரிப்புகள் அனைத்தையுமே தவிர்க்க வேண்டியது அவசியம்.

பிரச்னை உள்ளவர்கள், பசும்பால், எருமைப்பால், பாலாடைக்கட்டி (Cheese), வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் பவுடர் கொண்ட தயாரிப்புகள் அனைத்தையுமே தவிர்க்க வேண்டியது அவசியம்.

இவற்றுக்குப் பதிலாக, சோயா பால் (Soy Milk), பாதாம் பால் (Almond Milk), தேங்காய்ப் பால் (Coconut Milk), ஓட்ஸ் பால் (Oat Milk), லாக்டோஸ் இல்லாத பால் (Lactose-free milk) போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். 

பால் பொருள்களைத் தவிர்க்கும்போது உடலில் கால்சியம்  மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை ஈடுசெய்ய, கீரை வகைகள், எள் (Sesame seeds) மற்றும் சோயா பொருள்கள், மீன் போன்றவற்றையும், மருத்துவரின் ஆலோசனையோடு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 65. கடந்த பத்து வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. நான் தினமும் 15 நிமிடங்கள் வாக்கிங் போவேன். இது போதுமா... எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகமாக வாக்கிங் செய்ய வேண்டும்? ... மேலும் பார்க்க

தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து... உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்துக!கருப்பொருள் 2026: நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால்தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் கடமையோ அல்லது ஒரு வேலையோ அல்ல... அது தாய்க்கும் சேய்க்கும் இடையே நிகழும் ஓர் உணர... மேலும் பார்க்க

Doctor Vikatan: புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும்?

Doctor Vikatan: என் வயது 56. நான் கடந்த 20 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தேன். பலமுறை அதை விட நினைத்துத் தோற்றுப் போயிருக்கிறேன். பெரிய போராட்டத்துக்குப் பிறகு இப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது ஏன்?

Doctor Vikatan: என் உறவினருக்கு 35 வயது. அவருக்கு சிகரெட், குடி என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும், சமீபத்தில் வேறு பிரச்னைக்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கல்லீரலில் கொழுப்பு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தரிக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan:தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதுவே கருத்தடையாக இருக்கும் என்கிறார்களே... அது உண்மையா... தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் எத்தனை மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்கும்?பதில் சொல்கிறார... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென கேட்காமல் போன காது... மீண்டும் கேட்குமா, நிரந்தர பிரச்னையாகுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... எ... மேலும் பார்க்க