செய்திகள் :

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்டவர்கள் என்னவெல்லாம் சாப்பிடலாம்?

post image

Doctor Vikatan: என் உறவினருக்கு சமீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்து, அதிலிருந்து மீண்டார்.  தனியே வசிக்கும் அவர், உணவு விஷயத்தில் எதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்... எப்படிச் சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார் ஸ்ரீனிவாசன்

இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார் ஸ்ரீனிவாசன்

மாரடைப்புக்குப் பிறகு இதயத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து, எதிர்காலத்தில் மீண்டும் இதய பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பதில் உணவுப் பழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கவும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் முடியும். இதற்காக Mediterranean Diet மற்றும் DASH (Dietary Approaches to Stop Hypertension)  உணவுமுறை,  அதாவது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுமுறை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்?

தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை போன்ற முழுத் தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ராஜ்மா போன்ற  புரத உணவுகளும், பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். மீன் மற்றும் கொழுப்பு குறைந்த இறைச்சியை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்தோ அல்லது கிரில் செய்தோ சாப்பிடலாம். ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை அளவோடு பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை அளவோடு பயன்படுத்தலாம்.

எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சாசேஜ், பேக்கரி உணவுகள், எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நெய், வெண்ணெய், ஊறுகாய், அப்பளம் மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மதுபானங்களையும் தவிர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.


கவனத்தில் கொள்ள வேண்டியவை:


தினசரி உப்பின் அளவு 2,300 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும். அதேபோல், ஒரு நாளைக்கு சுமார் 30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொள்வது நல்லது. நிறைவுற்ற கொழுப்பின் அளவு மொத்த தினசரி கலோரியில் 6 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயச் செயலிழப்பு உள்ளவர்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்ப உணவு மற்றும் திரவ அளவுகளை மருத்துவர் மற்றும் உணவியல் ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயச் செயலிழப்பு உள்ளவர்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்ப உணவு மற்றும் திரவ  அளவுகளை மருத்துவர் மற்றும் உணவியல் ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பின்பற்ற வேண்டும்.

மாரடைப்புக்குப் பிறகு உணவுப் பழக்கத்தில் மேற்கொள்ளும் ஆரோக்கியமான மாற்றங்கள், இதயத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் நீண்டகால ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த உதவும்.


டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீனிவாசன்:
சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் Senior Consultant – Interventional Cardiology

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: குழந்தைகளைப் பாதிக்கும் பால் ஒவ்வாமை... மாற்று உணவுகள் உதவுமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்த வயதிலேயே அவளுக்கு பால் ஒவ்வாமை அதாவது லாக்டோஸ் இன்டாலரென்ஸ் உள்ளதாகச் சொல்கிறார் மருத்துவர். பால் பொருள்களைத் தவிர்க்குமாறு சொல்கிறார். குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: Post Diwali Weight gain... இதையெல்லாம் செய்தால் பழைய எடைக்குத் திரும்பலாம்!

Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இருப்பவர்களுக்கும், தீபாவளியை ஒட்டி, சில கிலோ எடை ஏறுவதைத் தவிர்க்க முடியாது. அப்படி அதிகரிக்கும் எடையானது சிலருக்கு அப்படியே தங்கிவிடுகிறது.... மேலும் பார்க்க

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயது. அவருக்கு லேசான குளிர், மழை என வானிலை மாறினாலே மூட்டு வலி வந்து அவதிப்படுவது வழக்கம். இந்த வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உணவுமுறையில் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே வயிறு பிரச்னை பண்ணுதா... உணவு விஷயத்துல தப்பு பண்ணாதீங்க!

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே,வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, பசியின்மை... இப்படி ஏதேனும் ஒன்று மாற்றி மாற்றிப் படுத்துகிறது. மழைக்காலத்துக்கும் செரிமான பிரச்னைக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த... இந்த உணவுகளை அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்!

Doctor Vikatan:ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான சத்துகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டியவை என ஏதேனும் உள்ளனவா... விந்தணுக்களின் தரத்தை மேம்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால் ஆணி தெரியும்... கைகளிலும் ஆணி பாதிப்பு வரும், தெரியுமா?

Doctor Vikatan:எனக்கு 45 வயதாகிறது. எனக்கு கை விரல்களில் ஆணி ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாதங்களில் தான் ஆணி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், கைகளில், குறிப்பாக விரல்களில் ஆணி வருமா... இது மற்ற ... மேலும் பார்க்க