செய்திகள் :

Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வெயிட்லாஸால் ஏற்பட்ட Stretch Marks... மாறுமா, நிரந்தரமா?

post image

Doctor Vikatan: என் மகனுக்கு வயது 20. கடந்த சில மாதங்களாக வெயிட் லாஸ் முயற்சிக்காக ஜிம் செல்கிறான். எடை குறைந்த பிறகு அவனுக்கு உடலின் பல இடங்களிலும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வந்துவிட்டது. இது நிரந்தரமாகத் தங்கிவிடுமா...

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

ஸ்ட்ரெச் மார்க்ஸில் பல வகைகள் உள்ளன. அதன் அடிப்படையை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.  இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் இருப்பது புதிய அல்லது ஆரம்பகட்ட  ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஆகும். வெள்ளை நிறத்தில் இருப்பது முதிர்ந்த (Mature) ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஆகும்.

எடைக்குறைப்புக்கு (Weight loss)  பிறகு ஏற்பட்டது அல்லது இப்போதுதான் வரத் தொடங்குகிறது என்றாலோ, நிறைய மாய்ஸ்ச்சரைசர் (Moisturizers) பயன்படுத்துவதன் மூலம் அதைக் கொஞ்சம் குறைக்க முடியும். இருப்பினும், இதை முற்றிலும் சரியாக்கவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
ஸ்ட்ரெச் மார்க்ஸை ஓரளவு மறைக்க சிகிச்சை முறைகள் உள்ளன. 

ஸ்ட்ரெச் மார்க்கானது சிறிய அளவில் மட்டுமே இருக்கிறது, பெரிதாகத் தொந்தரவு தரவில்லை என்றால், மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தி மேற்கொண்டு வராமல் தடுக்க முயலலாம்.

எந்தவிதமான க்ரீம்கள் (Creams) அல்லது ஜெல்கள் (Gels) மூலமாகவும் இதை முழுமையாக மறைய வைக்க முடியாது.

ஒருவேளை இது உங்களுக்குத் தொந்தரவாகவோ அல்லது சங்கடமாகவோ இருந்தால், மைக்ரோ நீட்லிங் (Microneedling) மற்றும் லேசர் (Laser) சிகிச்சைகள் மூலம் சரிசெய்யலாம்.

எந்தவிதமான க்ரீம்கள் (Creams) அல்லது ஜெல்கள் (Gels) மூலமாகவும் இதை மறைய வைக்க முடியாது.  அதாவது ஸ்ட்ரெச் மார்க்கை 100 சதகிவிதம் நீக்கிவிட முடியுமா என்றால் முடியாது. இதைத் தவிர்க்கலாமே தவிர ரிவர்ஸ் செய்ய வாய்ப்பில்லை.

டாக்டர் பூர்ணிமா:

சென்னை அண்ணாநகரில் Dr. Poornima's Clinic - House of Dermatology & Aesthetics-ன் உரிமையாளர்.  சருமநலத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: நான் கடந்த 3 வருடங்களாக நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்க்கிறேன். இப்படிநைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களுக்குக் கட்டாயம் சர்க்கரை நோய் வரும் என்கிறார்களே, அது உண்மையா?பதில் சொல்கிறார், சென்னைய... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக்கொண்டிருப்பவர்கள், உடற்பயிற்சிகள் செய்யலாமா?

Doctor Vikatan: எனக்கு 48 வயதாகிறது.எனக்கு இதயத்தில் ஆஞ்சியோ மூலம் ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள்.நான் உடற்பயிற்சி செய்யலாமா... அதாவது ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யலாமா... குழப்பம் தீர்க்கவும்.-... மேலும் பார்க்க

Doctor Vikatan: பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறுமா?

Doctor Vikatan:உடலுக்குப் பலம் கிடைக்க, அதிகாலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடிக்கலாம் என்று சிலர் பரிந்துரைக்கிறார்கள். இது உண்மையிலேயே நல்லதுதானா அல்லது பாதுகாப்பானதுதா... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொப்புளுக்கு மேலே கொழுப்புக்கட்டி... அப்படியே விடலாமா, அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 48. எனக்குத் தொப்புளுக்கு மேலே ஒரு ஜான் அளவுக்கு கொழுப்புக்கட்டி இருக்கிறது. அதை அப்படியே விடலாமா அல்லது அகற்ற வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும்,... மேலும் பார்க்க

10 மாதங்களில் 45 கிலோ கட் : `என்னவெல்லாம் சாப்பிட்டேன் தெரியுமா?' - வைரலாகும் பெண்ணின் Diet Plan

உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு உணவுமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், Saakshi Singh என்ற Content Creator தனது எடை குறைப்பு பயணம் குறித்துப் பகிர்ந்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.... மேலும் பார்க்க

Apollo : தோல் வழியாக 50 ஃபோன்டன் சிகிச்சைகள்: சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை புதிய மைல்கல்

சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, அறுவைசிகிச்சைக்கு முன்னதாக தயாரிப்பு ஏற்பாடுகள் எதுவுமின்றி 50 பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சை செயல்முறைகளை நிகழ்த்தி உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதை பெரும... மேலும் பார்க்க