செய்திகள் :

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எலும்புகள் பலவீனமாவதை எப்படித் தடுப்பது?

post image

Doctor Vikatan: என் வயது 50.  பொதுவாகவே இந்த வயதுக்குப் பிறகு, குறிப்பாக பெண்களுக்கு எலும்புகள் பலவீனமாகும், எளிதில் உடையும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எலும்புகள் பலவீனமடைவதைத்  தடுக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்... என்ன மாதிரியான கால்சியம் உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி.

எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி
எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி

50 வயதிற்குப் பிறகு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். வெறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அல்லது வேளை தவறாமல் சாப்பிடுவது மட்டுமே பலமான எலும்புகளைத் தந்துவிடாது. ஒட்டுமொத்த உடலையும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எலும்புகளை வலுப்படுத்த நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் முக்கியமாக, வெயிட் டிரெய்னிங் (Weight Training) பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடலின் மேல்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி (கால்கள்) ஆகிய இரண்டுக்கும் வெயிட் டிரெய்னிங் பயிற்சிகள் செய்வது மிகவும் முக்கியம். இப்படிச் செய்வதன் மூலம் நிச்சயம் வலுவான எலும்புகளைப் பெற முடியும்.

உடலின் மேல் மற்றும் கீழ்ப்பகுதிகளுக்குத் தேவையான எடைப் பயிற்சிகளைச் செய்வதுடன், சரியான புரச்சத்து உணவு (Protein Diet) உட்கொள்ள வேண்டியதும் மிக முக்கியம். 50 வயதுக்குப் பிறகு அதிக அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

50 வயதுக்குப் பிறகு அதிக அளவு புரதச்சத்து (Protein) எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

போதுமான சூரிய ஒளி (Sun Exposure) படுவதும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியம். எனவே, தினமும் உடலுக்குத் தேவையான அளவு சூரிய ஒளி படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

இந்த மூன்று விஷயங்களையும் சரியாகப் பின்பற்றி வந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புப் புரை நோயை (Osteoporosis) நிச்சயம் தடுக்க முடியும். எலும்புப்புரை நோய் வந்தால், எலும்புகள் ஸ்பான்ஜ் போல மென்மையாகிவிடும். லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்புகள் உடையலாம் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 

Doctor Vikatan: ஓவர் சுத்தம்... ஓசிடி பிரச்னை... மனநோயா, மீள்வது எப்படி?

Doctor Vikatan: என் 23 வயது மகளுக்கு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. எப்போதும், எதிலும் அதீத சுத்தம் எதிர்பார்க்கிறாள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் டென்ஷன் ஆகிக் கத்துகிறாள். தன்னுடை... மேலும் பார்க்க

Doctor Vikatan: பல்லைப் பிடுங்கிய இடத்தில் இடைவெளி விட்டால் மற்ற பற்கள் நகருமா?

Doctor Vikatan:பற்களை வெண்மையாக்கும் 'டீத் வொயிட்டனிங்' (Teeth whitening) சிகிச்சை பாதுகாப்பானதா... மஞ்சள் நிறப் பற்கள் ஆரோக்கியமற்றவையா? ஒரு பல்லைப் பிடுங்கினால், அடுத்தடுத்த பற்கள் நகரும் என்பது உண்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு அதிகரித்தால் பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan:என் ரத்தப் பரிசோதனையில் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்படும் கிட்னி செயலிழப்பைத் தடுக்க நான் உணவில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்... பழ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையால் பற்கள் ஆட்டம் காணுமா?

Doctor Vikatan:பல் மருத்துவர்களை அணுகினால், அடிக்கடி பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஸ்கேலிங் சிகிச்சை செய்தால் பற்கள் ஆட்டம் காணுமா, பற்களின் எனாமலை... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய்... மேலும் பார்க்க

மத்திய அரசு அறிமுகம் செய்த Face Wash வெறும் ரூ.47 மட்டுமே; எவற்றுக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

மாறி வரும் உலகில் எப்போதுமே அனைவரும் மிக முக்கியத்துவம் தரும் ஒன்று - 'ஆரோக்கியமான முகப் பராமரிப்பு'.ஆனால், சந்தையில் விற்கும் பெரும்பாலான பராமரிப்புப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்க... மேலும் பார்க்க