Trump: "அமைத்திக்கான நோபல் பரிசுக்கு என்னைவிட தகுதியான நபர் யாருமில்லை" - இன்னும...
Dorothy: "கார்த்திக் சுப்புராஜோட போன படம் மொக்கையாகத்தான் இருந்துச்சு!" - மிஷ்கின் ஓபன் டாக்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக்சஸ் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், "கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்துக்கு முன்னாடி வேறொரு படம் இயக்கியிருந்தார். அது ஒரு மொக்க படம்தான். நான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.
சொல்லப்போனா கார்த்திக் சுப்புராஜின் படங்களில், நான் பார்த்த முதல் படம் அதுதான். அவருடைய கடைசி படம், என்னமோ ரொம்ப நேரம் டான்ஸ் ஆடுறதுன்னு பெரிய மொக்கையா இருந்துச்சு. அப்புறம் என் அசிஸ்டென்ட்ஸ் ரெண்டு பேரு 'கார்த்திக் நல்லா படம் பண்ணுவார் சார்'னு சொன்னாங்க.
'இருடா நான் பார்க்குறேன், எனக்கு நிறைய படிக்க வேண்டியிருக்கு, தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. நான் திரையரங்குக்கு வர்றது என்னையே எண்டர்டெயின் பண்ணிக்க இல்ல, சாமிகளைக் கும்பிடுறதுக்காகத்தான் வர்றேன்'னு சொன்னேன். ஆனா, இந்தப் படத்தைப் பார்த்து நான் உண்மையிலேயே சாமிகளைக் கும்பிட்டேன்.
ரிஷிகாந்தும், சனந்தும் ரொம்ப ஆபத்தான இடத்துல நிக்கிறீங்க. ஏன்னா, வழக்கமா 200 பேர அடிச்சு, நாலு பொண்ணுங்களை லவ் பண்ணி, அம்மா சென்டிமென்ட் டயலாக் பேசி, அப்பாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துதான் பெரிய ஹீரோ ஆகணும்ங்கிற வழக்கமான டெம்ப்ளேட்டை அப்படியே உடைச்சுட்டு, நிஜமான ஹீரோக்களா நீங்க ரெண்டு பேரும் உருவெடுத்திருக்கீங்க. வாழ்க்கையிலும் நீங்க நிஜ ஹீரோக்கள், திரைத்துறையிலும் நிஜ ஹீரோக்கள்.

உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கு. அதனால நீங்களும் மத்தவங்களைப் போல ரசிகர் மன்றம் வச்சுக்கிட்டு இந்தக் காமெடி எல்லாம் பண்ணிட்டு இருக்காதீங்க.
நீங்க என்ன மாதிரி ஒரு சாதனை பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கு இப்போ புரியாது, உங்க பசங்களுக்கும் பேரன்களுக்கும்தான் புரியும். இந்தப் படத்துல நீங்க பண்ணியிருக்க வேலையைப் பார்த்து அவங்க நிச்சயம் பெருமைப்படுவாங்க.
உங்களுடைய துணிச்சல் எனக்குப் புரியுது. இந்தப் படம் திரையில ஓடும்போது உங்க மனசுக்குள்ள ஒரு பெரிய கஷ்டம் இருந்திருக்கும். ஏன்னா, உங்களுக்குள்ள இருக்குற ஆண் பிம்பத்தை நீங்களே கொல்லணும்" எனப் பாராட்டியவர், அவர்களுக்கு மோதிரத்தையும் பரிசாகக் கொடுத்தார்.


















