செய்திகள் :

Eggless Cakes: `பனானா வால்நட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

post image

பனானா வால்நட் கேக்

தேவையானவை:

நன்கு பழுத்த வாழைப்பழம் - 3

சர்க்கரை – ஒன்றே கால் கப்

ரிஃபைண்ட் எண்ணெய் - அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் - அரை கப்

மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

வால்நட் – அரை கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பைச் சேர்த்து இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும்.

வாழைப் பழங்களைத் தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தயிருடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரை கலந்து நன்றாக அடித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

ஐந்து நிமிடங்களில் அது நன்றாக நுரைத்து வரும். பிறகு அதனுடன் எண்ணெய், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து சர்க்கரை முழுவதுமாக கரைந்து க்ரீம் போல ஆகும் வரை அடிக்கவும்.

பின்பு இதனுடன் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் இதில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். மாவைச் சேர்த்துக் கலக்கும்போது அதிகமாக அடித்துக் கலக்கக் கூடாது. லேசாகக் கலந்தால் போதும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வால்நட்டைச் சேர்க்கவும்.

பிறகு ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி, கேக் கலவையை அதில் ஊற்றவும். பிரீஹீட் செய்த ஓவனில் இதை வைத்து 35-ல் இருந்து 40 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

கிட்டத்தட்ட 17-ம் நூற்றாண்டு வரை ரொட்டியையும் கேக்கையும் யாருமே வேறு வேறாகப் பிரித்துப் பார்க்கவில்லை.

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (நண்டு) வறுவல்! - வீட்டிலேயே செய்வது எப்படி?

கத்திரிக்காய் (நண்டு) வறுவல்தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 5 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்) பூண்டு - 4 பற்கள் க... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: மீல்மேக்கர் (மட்டன்) குழம்பு! - வீட்டிலேயே செய்வது எப்படி?

மீல்மேக்கர் (மட்டன்) குழம்புதேவையானவை: மீல்மேக்கர் – ஒரு கப் பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) நறுக்கிய தக்காளி – ஒன்று கறிவேப்பிலை – சிறிதளவு மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் – ஒரு டேபிள... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: சீராளன் கறிக்குழம்பு - வீட்டிலேயே செய்வது எப்படி?

சீராளன் கறிக்குழம்புதேவையானவை: தட்டைப்பயிறு (காராமணி) - 100 கிராம் பாசிப்பயிறு (பச்சைப்பயிறு) - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் சின்ன வெங்காயம் - 10 (நறுக்கிக்கொள்ளவும்) தக்காளி - 2 (நறுக்கிக்கொள... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: பலாக்காய் (கோழி) வறுவல் - வீட்டிலேயே செய்வது எப்படி?

பலாக்காய் (கோழி) வறுவல்தேவையானவை: சிறிய பிஞ்சு பலாக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய தக்காளி - ஒன்று காய்ந்த மிளகாய் - 5 (இரண்டாகக் கீறவும்) பூண்டு - 5 பற்கள் (நசுக்கவும... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (கோழி) குழம்பு! - வீட்டிலேயே செய்வது எப்படி?

கத்திரிக்காய் (கோழி) குழம்புதேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (இரண்டாக நறுக்கவும்) நசுக்கிய பூண்ட... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: சேனை (மீன்) வறுவல்! - வீட்டிலேயே செய்வது எப்படி?

சேனை (மீன்) வறுவல்தேவையானவை: சேனைக்கிழங்கு – அரை கிலோ கடலை மாவு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் எலுமிச்சை – ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) எண்ணெய்... மேலும் பார்க்க