செய்திகள் :

El Nino சவால்: வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

post image

தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது.

எல் நினோ ஆண்டு என்பதால் 'நமக்கு என்ன மாதிரியான சவால்கள் காத்திருக்கின்றன?' என்ற அச்சமும் இயல்பாகவே எழுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் என்னென்ன என்பன குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனைத் தொடர்கொண்டு பேசினோம்.

 மழை
மழை

நம்மிடம் பேசிய அவர், "நாம் கடுமையான வெப்பத்திற்கு எதிராக நம்மைத் தயார்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.

தற்போது செப்டம்பர் மாதமாக இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

வரக்கூடிய மாதங்களிலும், அடுத்த ஆண்டின் கோடை காலத்திலும் இந்த வெப்பம் மேலும் தீவிரமடையும் என்பதால் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதேசமயம், 2015 மற்றும் 2023 எல் நினோ காலங்களைப் போலவே தமிழகத்தில் கடுமையான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் பருவமழைக்கான ஆயத்தப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையானது மாதம் முழுவதும் தொடர்ச்சியாகப் பெய்யாமல், மழை பெய்யும் நாட்களும், நேரமும் குறைவாகவே இருக்கும். ஆனால் குறுகிய காலத்தில் அதிக அளவு தீவிர மழைப்பொழிவு இருக்கும் என்பதால் பாதிப்புகளும் அதிகமாக இருக்கக்கூடும்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன்

அரசு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

இந்நேரம் அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் அரசு முடித்திருக்க வேண்டும்.

குறிப்பாக அனைத்துக் கால்வாய்களையும் தூர்வாருதல், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்துதல், நீர் வடிந்து செல்வதற்குத் தடையாக இருக்கும் அடைப்புகளை நீக்குதல் மற்றும் நீர்நிலைகளின் முழு கொள்ளளவை எட்டும் வகையில் தூர்வாரி தயார் நிலையில் வைத்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

மேலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அங்கு தண்ணீரை வெளியேற்ற மோட்டார்களைப் பொருத்தி தயாராக இருக்க வேண்டும்.

இருப்பினும், தற்போது வரை ஆறுகள், குளங்கள், ஏரிகள் அல்லது கால்வாய்களில் தூர்வாரப்பட்டதற்கான எந்தவொரு பெரிய அறிகுறிகளும் தென்படவில்லை.

 மழை
மழை

எனவே, பருவமழை தொடங்குவதற்கு முன் அரசு தீவிரமாகச் செயல்பட்டு இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

10 செ.மீ மழை 3 நாள்களாகப் பிரிந்து பெய்வதற்கும், வெறும் 3 மணி நேரத்தில் பெய்து முடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

எனவேதான் இந்தக் குறுகிய கால அதிதீவிர மழைப்பொழிவை எதிர்கொள்ள தூர்வாரும் பணிகள் மிக அவசியமாகிறது" என்றார்.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க