செய்திகள் :

'அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்'- எதிர்க்கட்சி வரிசையில் தாரகை; மாணிக்கம் தாகூர் விளக்கம்

post image

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கத்பர்ட், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்கு இடம் மாறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான்.

சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

 தாரகை கத்பர்ட்
தாரகை கத்பர்ட்

மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு மாண்புமிகு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம்.

செய்தியை செய்தியாகவே பாருங்கள். அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

`தாய் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ – அதிரடி காட்டிய நீதிமன்றம்; அசராத புதுச்சேரி அரசு

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்... மேலும் பார்க்க

Nepal Floods: தமிழர்களை மீட்க காட்மண்டுவில் தமிழக அதிகாரிகள்! - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டதட்ட 900 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த வெள்ளப... மேலும் பார்க்க

Nepal Flood : '84 தமிழர்களை காணவில்லை' - நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனா ஆதவ் அர்ஜூனா பேசியதா... மேலும் பார்க்க

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' - தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார்... மேலும் பார்க்க

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார். சபாநாயகர்திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசு... மேலும் பார்க்க