செய்திகள் :

நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன?

post image

நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை ஊரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கர், ஆற்றில் குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு தச்சநல்லூர் பைபாஸ் சாலை நோக்கி தனது பைக்கில் சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கர்
கொலை செய்யப்பட்ட பாஸ்கர்

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பாஸ்கரை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தலையைத் துண்டித்துள்ளனர். பின்னர், அவரது தலையை எடுத்துக் கொண்டு 150 மீட்டர் தொலைவில் பாஸ்கர் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் சந்திப்பில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாஸ்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மின் கம்பங்களில் சாதிய அடையாளமான வர்ணங்கள் தீட்டப்பட்டது தொடர்பாகவும், அது தொடர்பாக பாஸ்கர் போலீஸாருக்கு தகவல் கூறியதால் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது தெரிய வந்தது.

இதற்கிடையில் இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இரண்டு பேர் அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல்
கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல்

இதனையடுத்து  மணிமூர்த்தீஸ்வரம், கட்டுடையார் குடியிருப்புப் பகுதிகளில் பதற்றம் நிலவியதால் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் கட்டுரையார் குடியிருப்புப் பகுதிகளில் அடிதடி உள்ளிட்ட அசம்பாவிதம் நடந்தால் போலீஸுக்கு தகவல் கூறும் இன்பார்மராக பாஸ்கர் இருந்து வந்தாராம்.  

முன்விரோதம் காரணமாக பாஸ்கர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு, நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் கட்டுரையார் குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன், பொன்ராஜ் ஆகியோருடன் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு

மணிகண்டன், பொன்ராஜ் ஆகியோர் அந்தப் பகுதியில் கபடி போட்டி நடத்த ஏற்பாடு செய்ததாகவும் அதை பாஸ்கர் தடுத்ததாகவும் அதனால் அவர்களுக்குள் மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில சம்பவங்களையும் காரணங்களாகச் சொல்கிறார்கள் அப்பகுதியினர். முன்விரோதமே இதற்கு முக்கிய காரணமாக விசாரணையில் தெரிய வருகிறது. சரணடைந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிலரைத் தேடி வருகிறோம்” என்றனர்.    

லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார். நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய... மேலும் பார்க்க

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில... மேலும் பார்க்க

`கஞ்சா நெட்வொர்க்' - ஒடிசாவுக்கே சென்று முக்கிய குற்றவாளியைத் தட்டித்தூக்கிய வேலூர் போலீஸ்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா (ஃபைல் படம்)கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க