செய்திகள் :

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்' எனச் சேர்த்திருக்கிறேன்" - எலான் மஸ்க்

post image

"WTF is" பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார்.

அதில் எலான் மஸ்க் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலில், எலான் மஸ்க்,`` உங்களுக்குத் தெரியுமா என் மனைவி ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவளுக்கும் எனக்கும் பிறந்த என் மகன்களில் ஒருவருக்கு, இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் பெயரில் வரும் சேகர் என்பதை இணைத்திருப்போம்.

Shivon Zilis
Shivon Zilis

என் மனைவி கனடாவில் வளர்ந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டாள். அவளுடைய இந்திய தந்தை கனடாவின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன். சரியான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது" என்றார்.

ஷிவோன் ஜிலிஸ்

யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷிவோன் ஜிலிஸ், 2017-ல் எலான் மஸ்க்கின் AI நிறுவனமான நியூராலிங்கில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சிறப்பு திட்டங்களின் இயக்குநராக உள்ளார். ஜிலிஸ் - எலான் மஸ்க் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.

`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!

ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்... மேலும் பார்க்க

``மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்?" - நடிகை நிவேதா பெத்துராஜ்

தெருநாய்களை பாதுகாக்க கோரி 'விலங்குகளுக்கான சொர்க்கம்' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துக... மேலும் பார்க்க

``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பிபி... மேலும் பார்க்க

``20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்... மேலும் பார்க்க

Sachin Tendulkar: ``பாபாவின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது" - புட்டபர்த்தியில் சச்சின் உரை

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ... மேலும் பார்க்க

Veeraswamy: லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் வீராசாமி உணவகம் - அகற்றக்கோரும் நிறுவனம் - காரணம் என்ன?

லண்டனில் உள்ள மிகப் பழமையான உணவகங்களில் ஒன்று வீராசாமி உணவகம். ஏப்ரல் 1926 முதல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிச்செலின்-ஸ்டார் உணவகமாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கிரவுன் எஸ்டேட் (Crown Estate) எனு... மேலும் பார்க்க